பிரிவு உபச்சார விழாவில்
தென்றல்.இரா.சம்பத்
11.03.1995 கல்லூரி விடுதி & வணிகவியல் துறை பிரிவு உபச்சார விழாவில் :!
--------------------------------!
கவி எழுதச்சொல்லி!
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய!
என் காதலர்கள்!
உறவா! பிரிவா!என!
வழி சொல்லாமல்!
வழி மாறியதால்!
இரண்டைப்பற்றியும்!
எனக்குப் பழக்கமான!
எளிய தமிழில்!
எழுதி வந்திருக்கிறேன்!!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....!
எத்தனையோ!
கவி எழுதக் காத்திருக்கும்!
என் எழுதுகோலுக்கு!
என்ன வந்ததோ!!
உங்களுக்காக !
எழுத ஏடெடுத்தவுடன்!
கண்ணீரையல்லவா!
காணிக்கை கேட்கிறது..!
உறவு...!
இனிமையானதுதான் !
பிரிவு - நமக்கு!
புலப்படாத நாள்வரை!
நட்பு...!
நல்ல சொல்தான்!
நாம்- இந்த!
கல்லூரி இறுதிநாளை!
கடக்காதவரை!
சீசனுக்கு வந்துபோகும்!
பறவைகளைப்போல!
படிப்புக்கு வந்துபோகும்!
நமக்கு!
இந்த கல்லூரியும்!
ஒரு வேடந்தாங்கல்தான்...!
சீசன் முடிந்துவிட்டது!
சல்லாபித்த நாம்!
சிறகு விரித்துத்தான்!
ஆக வேண்டும்.!
சிந்துவது கண்ணீரானாலும்!
உன்மேல் விலுவதெல்லாம்!
பன்னீராகட்டும்...!
பிரிவை எண்ணி!
ஏன் வருந்துகிறாய்!
பிரிவு உனக்கொன்றும்!
புதியதல்லவே...!!
பிரிவுக்குப் பிறகுதானே !
ஓர் உறவும் இருக்கிறது...!
ஓர் உயர்வும் இருக்கிறது...!
தகப்பனிடமிருந்து பிரிந்து!
தாய் வயிற்றில் உறவு கொண்டாய்!
தண்ணீர் வடிவத்திலே!
அங்கே- உனக்கு!
உறவும் கிடைத்தது!
கரு என்ற !
உயர்வும் கிடைத்தது...!
தாய் வயிற்றிலிருந்து பிரிந்து!
தரையோடு உறவு கொண்டாய்!
சிசுவின் வடிவத்திலே!
அங்கே- உனக்கு !
உலகோடு உறவும் கிடைத்தது!
குழந்தை என்ற !
உயர்வும் கிடைத்தது...!
இப்படி!
உன் ஆரம்பமே பிரிவில்தானே !
அரங்கேறியிருக்கிறது!
அப்புறம் ஏன் வருந்துகிறாய்!
இப்பிரிவிற்க்காக...!
சந்தோசப்படு!
மூன்றாண்டுகளுக்குள்!
எத்துனை நல்ல உள்ளங்களை!
நட்பாக்கிக்கொண்டோம் என!
சந்தோஸப்படு...!
வருத்தப்படு!
மூன்றாண்டாய்!
இன்னும் இத்துனை!
உள்ளங்களை!
அறிய முடியவில்லையேவென!
வருத்தப்படு...!
இப்படியெல்லாம் எழுதி!
எனக்கே நான்!
ஆறுதல் சொன்னாலும்!
என் அடிமனம் மட்டும்!
அழுகையை நிறுத்த மறுத்து!
அடம்பிடிக்கிறது!
ஆம்!
கையடிந்த பின்னாலே!
கை வளை கேட்பவளாய்!!
பிரிவை வெளியே !
நிறுத்திவிட்டு!
உறவோடு இங்கே!
புலம்பிக்கொண்டிருக்கிறேன்...!
!
விரல்போன நேரத்தில்!
வீனை வாசிக்க !
ஆசை வந்தவனாய்!!
பிரிவு வரும் வேளையிலே!
உறவுக்காக ஏங்குகிறேன்...!
விடுதி நாள் !
எனச்சொன்னபோது!
என் விலாஎலும்புகளும்!
விழாக்கோலம் பூண்டது!
அதுவே நமக்கு!
பிரிவுரை நாள்!
என நினைக்கும்போது!
நெஞ்சத்தில் !
நேறிஞ்சி முள்ளல்லவா!
நிமிடத்திற்கொருமுறை!
மோதிச்செல்கிறது...!
இரயில் சிநேகமாய்!
நம் உறவு இருந்திருந்தால்!
நயமோடு சொல்லியிருப்பேன்!
நட்பின் அடையாளங்களை..!
இங்கே நம் இதயங்கள்!
சிநேகமானதால்!
என்னவென்று எடுத்துரைப்பேன்...!
மூன்றுநாள் !
கல்யாணவீட்டு நட்பென்றால்!
நட்பை நளினப்படுத்தி!
பாட்டெழுதலாம்!
ஆனால் மூன்றாண்டு!
கல்லூரி நட்பானதால்!
வெட்க்கத்தோடு !
ஒப்புக்கொள்கிறேன்!
நம் காதலைச் சொல்லி!
கவி எழுத - எனக்குத்!
தெரியவில்லையென்பதை...!
என் உள்ளங்களே !!
மரங்களுக்கு மரணம்!
இலையுதிர்க்காலமல்ல...!
உரசுவதால் அவமானம்!
தங்கத்திற்கல்ல...!
ஆம்...!
வீழ்ச்சியுற்ற அருவிதானே !
நதிகளானது...!
விதை விழுந்துவிட்ட பிறகுதானே!
செடிகளானது...!
காய்ச்சப்பட்ட இரும்புதானே !
ஈட்டியானது...!
கரும்பு கசக்கப்பட்ட பிறகுதானே!
வெல்லமானது...!
!
அப்படித்தான்!
நம் உறவுக்கு மரணம்!
இந்த பிரிவுமல்ல...!
இந்த சின்னப் பிரிவுக்குப்பின்னே!
நமக்கு உயர்வும் வந்து சேரும்..!
நம் உறவும் தொடர்ந்து வரும்...!
என !
என் வார்த்தைகளை!
முடிக்கும்முன்!
இன்னுமொருமுறை!
உரக்க உரைத்துக்கொள்கிறேன்!
மரங்களுக்கு மரணம்!
இலையுதிர்க்காலமல்ல...!
நம் உறவுக்கு மரணம்!
இந்தப் பிரிவுமல்ல