பதுங்குகுழி வாழ்வு
தீபச்செல்வன்
தீபச்செல்வன்!
!
பதுங்குகுழியினூளான வாழ்வு!
மனித நாகரீகத்தை!
வியந்துகொண்டிருக்கிறது !
நமது நகரின் பதுங்குகுழி !
பற்றிய விளம்பரங்களோடு.!
வீதியில் நடந்துகொண்டிருக்கையில்!
வேலியோர!
கால்வாய்களை அண்டியபடி!
அன்றாட வாழ்வு!
சென்றுகொண்டிருக்கிறது.!
வெள்ளைச்சீருடைகளை!
அணிந்துகொண்டு!
புத்தகங்களை!
பதுங்கு குழிகளில் நிரப்பி!
அதன் சுவர்களில்!
பாடத்தை எழுதி!
படித்துக்கொண்டிருக்கிறார்கள்!
மாணவர்கள்.!
அடிக்கடி திடுக்கிட்டு!
சிறுசிறு பள்ளங்களில்!
விழுந்து கிடக்கும்!
குழந்தைகள்!
சத்தமிடாமல் மூச்சிட்டு!
பதுங்கு குழியின் மூலைகளில்!
ஒளிந்துகொண்டு!
செவிகளை அறுத்து!
வீசினார்கள்.!
காற்றைக்கேட்டுப்!
பயந்துகொண்டார்கள்!
வானத்தை பார்க்க மறுத்து!
குப்புற விழுந்தார்கள்.!
இப்பொழுது இங்கே!
வீடுகட்டத் தேவையில்லை!
பள்ளிக்கூடம்!
கட்டத் தேவையில்லை!
வீதிசெய்யத் தேவையில்லை?!
மண்ணைக் கிண்டியே!
வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்!
மண்ணைக்கீறியே!
பயணம்செய்யவேண்டும்.!
நிலத்தின்கீழ்!
இயல்பான தேவைகள்!
அடங்கிக் கிடக்கின்றன.!
உரிமைகளும் அடையாளங்களும்!
புதைந்துபோகின்றன.!
ஒவ்வொருவரும் தங்களுக்கான!
பதுங்கு குழிகளைப்பற்றியே!
தீவிரமாக செயற்படவேண்டியிருக்கிறது!
சில வேளையில்!
தூக்கிப் புதைப்பதற்கு!
யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள்!
மொத்த வாழ்வும்!
பதுங்கு குழியில் அடங்கி!
புதைகுழிகளாகவும் மாறலாம்.!
நமது மனித வாழ்வு!
மண்ணைக்கிண்டி!
பூமியின் அடியைநோக்கி!
சென்றுகொண்டிருக்கிறதே?!
இவைகள்!
புதிய நாகரீகத்தின்!
வாழ்க்கை முறையா?!
விஞ்ஞானங்களின் பிரதிபலிப்பா?!
மனித உரிமைகளும்!
சிறுவர் உரிமைகளும்!
உக்கித்தொலைகின்றன!
வாழ்வும் கேள்விகளும்!
பதுங்கு குழியில் புதைகின்றன।