தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு

எம்.ரிஷான் ஷெரீப்
நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்!
நிழலிலேயே!
உட்கார்ந்திருக்கிறது !!
உங்கள் கனல்களை!
அதன்மேல் கொட்டலாம்,!
சாபங்களை அள்ளியெறியலாம் ;!
அத்தனையையும் விழுங்கியது - நிலம்!
அதிர அதிரச் சிரிக்கும் !!
அதன் அருகாமை!
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்!
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,!
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்!
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் ! !
சீண்டிப்பார்க்கலாம் - அதனை!
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,!
தலைகோதித் தடவலாம்,!
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;!
அத்தனையையும் !
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து!
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !!
நுனிவிரல் தீண்டி!
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்!
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...!
இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்!
நீங்கள் இருப்பதாக!
உறுதிபட உரக்கச் சொல்வேன் ! !
நெருப்பு விழுங்கும் பறவையது!
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் ! !
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

போர்தவிர்

அல்வை.கோ.இளஞ்சென்னி
அல்வை.கோ.இளஞ்சென்னி !
அமைதியின் எதிரியிடம் !
அலையும் நீயொரு !
யுத்த பேரிகை! !
யுத்த மில்லாத !
யுகத்தை தேடும் !
மானிடப் பிறவிகள் !
நாங்கள்: தமிழினம்! !
போதை தணியாத !
போர்வெறியும் !
ஆளத் தெரியாத !
அன்பு நெறிகளும் !
அற்றுக் கிடக்கும் !
சிங்களத் தாயிடம் !
சமாதானத் தேடலா? !
குரல்மேல் !
குரல்கள் எழுந்தும் !
குதறி எறிகின்றாள் !
சமாதானப் புறாக்களை. !
புறாக்களின் இறக்கையை !
ஒட்டுண்ணி விலங்குகள் !
ஒடித்தெறிய எத்தனை எத்தனம் !
அடடா அதுவோ அரசியல்? !
இயற்கையை ஈர்த்திட !
இவளால் முடியுமா? !
வானவெளியும் !
பேசும்காற்றும் !
பசும்தரைகளும் !
பேசத் துடிக்கின்றன கொடுமை கண்டு. !
மானிட வர்க்கமே !
மேதினி வாழ விழித்து எழுங்கள்! !
அங்கே காற்றோடு கலந்து !
நாதம் அதிர்கிறது அது !
வெறும் சத்தமல்ல !
புலியின் தாக பேரிகை !
!
தமிழ் மானிடத்தின் !
தானைத் தலைவன் !
தீர்க்க தரிசனம் !
அலைமோதி ஆர்ப்பரிக்கிறது !
அமைதியைத் தேடிய தமிழ்த்தேசம் !
அகம் புறம் ஒன்றாய் !
சுதந்திர விடியலுக்கு !
சமாதான எழுச்சியில் நிற்கிறோம்! !
காலம் ஓடுகிறது !
சிங்களத் தாயே! !
நில்லாதே ! !
கரங்களை நீட்டு! !
யுத்தம் முடியட்டும். !
மறவர் குலத்தோடு !
உறவாடி எமக்கு !
உரியன எல்லாம் !
உடமையாய் ஈதலே வெற்றி! !
போர் வேண்டுமாயின் !
போய்விடு தாயே! !
புலிகளின் புனிதப்படை !
பாயட்டும் குகையை உடைத்து. !
நரியின் கனவுக்கு !
கா..கா௪ பண்ணாது !
புலிகள் கூட்டம்! !
புலிகள் வானத்தில் ஊடுருவி !
புலரும் காலையை !
ஏற்றிவர !
ஏவுகணை காத்திருக்கு. !
அண்டை அயலாரின் !
பயிற்சிப் பட்டறையில் !
படித்தவை பட்டாளம் !
புட்டிப் பாலளவு. !
முட்டிய போர்களிலே !
பட்ட இரணங்களை !
எட்டிப்பார்! எத்தனை.. எத்தனை! !
!
முல்லைப் பிரிவெங்கும் !
முதுகை முறித்தாய் !
படைத் தளங்கள் எல்லாம் !
போட்டடித்து பிணம் குவித்தாய் !
கடலில் மூழ்கினாய் !
வானத்தில் வலிமை அற்றாய்!
இப்போது அப்போது அல்ல !
போர் மணந்தால் போதும் !
ஊரே கிளம்பும்: !
உறவெல்லாம் களம்தேடும் !
கயவர் படைகளையே !
கிழித்து எறிவர் !
வயிற்றில் தீ சுமக்கும் !
வீரத் தமிழர் இவர்

விதி வைத்த.. கருவறை.. இதய முற்ற

ஜாவிட் ரயிஸ்
விதி வைத்த முற்றுப்புள்ளி.. கருவறைச் சுகம்.. இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை!
01.!
விதி வைத்த முற்றுப்புள்ளி!
------------------------------!
மகளே!!
மூச்சுக் காற்று மட்டும்!
உரிமை கோரும்!
ஏகாந்தமான இரவொன்றில்!
உன் நினைவுகளை!
கொஞ்சம் அசை போடுகிறேன்...!
தாயின் கருவறைக்கு!
அர்த்தம் கொடுத்தவளே!!
தந்தை என் மனதில்!
பூவாய் பூத்தவளே!!
உறக்கம் இன்றிய இரவுகளில்!
உன் அழுகை எனக்கு தாலாட்டு!
அலுவலக களைப்பில் வரும் எனக்கு!
உன் அழுகை தானே வாடைக்காற்று!
தென்றல் என்னை தீண்டியதாய்...!
சாரல் என்னை சீண்டியதாய்...!
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு!
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்!
நிலவை கையில் ஏந்தியதாய்...!
பூக்களே என்னை தாங்குவதாய்!
எனக்குள் ஒரு பூரிப்பு...!
என் மடியில் உன் தலை சாயுகையில்!
பாவாய் நீயும்!
பாவை ஏந்தி!
விளையாடும் ஒரு கணத்தில்!
பூவாய் மாறி!
உன் தாய் நெஞ்சும்!
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?!
ஆயிரம் நாட்கள் காத்திருந்து!
ஆறுதலாக பிறந்தவளே!!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்!
இறைவன் விதியில் நிலைக்கலையே?!
தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது!
கனவிலாவது நீ வருவாய்!
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க!
மாறி மாறி முத்தமிடுவாய்!
02.!
கருவறைச் சுகம்!
----------------------!
அன்னையே!!
உன் கருவறைக்குள்!
மீண்டும் என்னை!
மீட்டெடுப்பாயா?!
இந்த உலகம்!
என்னை பயமுறுத்துகிறது!
உன் உதிரத்தில் நானிருந்தேன்!
உணர்ந்தது பூ வாசம் - இன்று!
உலகத்தில் நானிருக்க!
உணர்வதெல்லாம் பிண வாசம்!
நிசப்தத்தின் மத்தியிலே!
என்னை தாலாட்டியது!
உன் நாடித்துடிப்பு- இன்று!
சப்தங்களால்...!
நிசப்தமாக பார்கிறது!
என் இதயத்துடிப்பு!
மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை!
என் அசைவு மொழிகளுக்கு!
பக்குவமாய் நீ!
பதில் சொன்னாய்!
மொழிகளால் தான்!
இங்கு சிலபேர்!
எலிகளாய்...!
ஒழிய வேண்டி இருக்கிறது!
என் உலகம்!
மூடி தான் இருந்தாலும்!
மூச்சுக்காற்றுக்காய்!
தவமிருக்கவில்லை!
நான் அன்று!
அந்தமின்றி விரிந்தாலும்!
என் உலகம்- சிலவேளை!
மூச்சுவிடக் காற்றின்றி!
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று!
அன்னையே!!
உன் கருவறைக்குள்!
மீண்டும் என்னை!
மீட்டெடுப்பாயா?!
இந்த உலகம்!
என்னை பயமுறுத்துகிறது !
!
03.!
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை!
---------------------------------------------------------------!
இதயத்தை நோக்கி ஓட வேண்டிய!
என் குருதிக் கலங்கள் எல்லாம்!
உன்னை நோக்கியே ஓடி வருகிறது...!
செங்குருதி துனிக்கைகளையும்!
வெண் குருதி துனிக்கைகளையும் விஞ்சி!
உன் நினைவு துணிக்கைகளின் செறிவு!
அதிகமாய் இருக்கிறது என் குருதியில்!
எல்லா மலரையும் விட்டு விட்டு!
உன் கூந்தலை முகரவே துடிக்கிறது!
என் நாசி!
நீ விழி திறக்கையில் விடியலையும்!
விழி மூடுகையில் இரவினையும்!
மாறி மாறி அனுபவிக்கிறது!
என் உலகம்!
உன் புன்னகையினை சேமிக்க!
உன் உதடுகளின் கீழே!
ஞாபக வங்கியை!
அமைத்து வைத்திருக்கிறது என் இதயம்!
தத்தித் தத்தி நடக்கும்!
உன் பிஞ்சுக் கால் தடங்களை!
தித்திப்போடு தொடர்கிறது!
என் பாதங்கள்!
உடம்பின் ஒவ்வொரு அணுவும்!
தனித்தனியாய்!
இன்பமடைந்து களிக்கிறது!
மழலை மொழியில் நீ!
நானா! (சகோதரா) என்று அழைக்கும்!
ஒரு நொடியில்

முதலிரவு .. சூரியனைச்.. தெளிந்த

தமிழ் யாளி
முதலிரவு ஆலோசனை.. சூரியனைச் சுட்ட நெருப்பு.. தெளிந்த நல்நீரும் காற்றும்!
01.!
முதலிரவு ஆலோசனை!
---------------------------------!
நான் ஒரு கன்னிமாறா!
நூலகம் இன்னும்!
விற்கப்படாத விலை!
போகாத புத்தகம்!
என் அப்பனின் இரவுக்!
கவிதையின் முதல்!
பதிப்பு சந்தைக்கு!
வந்து முழுமையாக!
முப்பதாகிறது!
தினம் தினம் எங்கள்!
வீட்டில் ...!
கண்காட்சி வருகிற!
விழிகள் எல்லாம்!
உருட்டியும் புரட்டியும்!
பார்க்கும்!
பாட்டு படிப்பு பண்பு!
என்பது பவுனில்!
வந்து முடியும்!
ஐம்பது நாற்பது!
முப்பது இருபது!
இனியும் முடியாது!
எழுந்திரு!
என் திருமணச்!
சேமிப்பிற்காக எங்கள்!
வீட்டு வயிறுகள்!
பசிக்கு பட்டினியையே!
செரித்து வளர!
பழகிவிட்டன!
ஆகையால் அவை!
உண்ணா விரதம்!
என்பதை ஒரு நாளும்!
உச்சரித்தது இல்லை!
எனக்காக அவிழ்த்த!
கோவணத்தை என்!
அப்பன் இன்னும்!
கட்டவில்லை!
அருணாக்கயிற்றை!
அடமானம்!
வச்சுத்தான்!
மூன்றாம் வருடத்!
தேர்வை முழுசா!
எழுதினேன்!
இனியும் தட்சணை!
கொடுத்து தாரமாக்க!
அப்பனுக்கோ!
வக்கனை இல்லை!
ஆகையால்!
இன்னும் சில!
நாட்களில்!
அறுபதுக்கோ ... எழுபதுக்கோ ...!
நாளைய பிணத்திற்கு!
இன்றே!
மலர்வளையமாக!
நான் மாறக்கூடும்!
அங்கேயும் வந்து!
மொய் எழுதி ...!
முதலிரவு!
ஆலோசனை கூறாமல்!
உங்கள் எதிர்!
வீட்டிலும் என்னைப்!
போல் இன்னொருத்தி அவளது முகம்!
பார்த்தே!
கண்ணாடியின் பாதரசம் பழுதடைந்து!
கொண்டிருக்கலாம்!
அவளை முதலில் .!!
கரையேற்றுங்கள் ...!
!
02.!
சூரியனைச் சுட்ட நெருப்பு!
-------------------------------------!
பாரதி ... நீ!
சூரியனைச் சுட்ட நெருப்பு- புயலை எரித்த புதுத் தென்றல்!
மலையை உடைத்து எரிந்த தமிழ் உளி!
நீ ... உன் எழுத்து ஏவுகணைகளை ஏந்தியபோதுதான் அந்த பருத்த பீரங்கிகளுக்கும் பயம்வந்தது!
கருவை மட்டும் சுமந்த எங்கள் பெண்கள் கவியை சுமந்ததும்உன்னாள் தான்!
தமிழ் தாயும் மார்தட்டிக்!
கொள்கிறாள் உன்னாள் தமிழ்பபாலை எங்களுக்கு முலை ஊட்டியதற்காக!
உன் கனல் வரிகளைக்!
கொஞ்சம் கடன் கொடுப்பாயா எங்கள் உரிமைக்கூழ் காய்ச்ச உலை வைக்க வேண்டும்.!
03.!
தெளிந்த நல்நீரும் காற்றும்!
--------------------------------------!
நாகரீகச் சேறு வழுக்கி!
நவீனப் பள்ளத்தாக்கில்!
விழுந்து மரணத்தோடு!
போராடும் மனிதனுக்கு!
அவசரத்தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
கூவ நீருக்கும்!
குழாய் நீருக்கும்!
தற்சமயம் நிறபேதம்!
மட்டும் தான்!
இனி குடிமட்டுமல்ல!
குடிநீரும் குடியைக்!
கெடுக்கும்!
கந்தகமும்!
கரியமிலமும் காற்றோடு!
கலப்புமணம்!
புரிந்ததால்!
சுத்தக்காற்று!
வார்த்தையில் மட்டும்!
இனி காச நோயினும்!
காற்று நோய்!
கொடியது!
நிக்கோடினால்!
தேய்பிறையான!
நுரையீரலுக்ககும்!
ஒளிச்சேர்க்கைக்கும்!
கூட திறனிழந்த!
இளந்தளிர்களுக்கும்!
அவசியத் தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
எழுதியது

சொல்லிக் கொள்கிறாய்...வாழ்விக்கும் மரணம்

சு.திரிவேணி, கொடுமுடி
சொல்லிக் கொள்கிறாய்...!
01.!
சொல்லிக் கொள்கிறாய்...!
------------------------------!
இரண்டு புள்ளிகள் எதிர்நிலையடைகையில்!
இடையிலிருப்போர் நிலை பரிதாபம்தான்.!
சமாதான முயற்சிகள் பல வகையுண்டு.!
பள்ளத்தை இட்டு நிரப்பி மேடாக்கலாம்!
மேட்டைத் தட்டிப் பள்ளமாக்கலாம்!
கயிற்றைக் கட்டி இழுக்கும் வகையும் உண்டு.!
சமனப் படுத்தும் முயற்சியில் ஏனோ!
எப்போதும் நீ கயிற்றைக் கட்டி!
இழுக்கவே விரும்புகிறாய்!!
எந்த விவாதத்திலும் எதிர் நிலையிலேயே இருக்கிறாய்!
பிறரின் நியாயம் புரிவிக்கும் முயற்சி என்றாலும்!
யாருக்கும் புரியாததோ என் நிலைப்பாடு என!
ஏற்படும் குழப்பம் மனக் கரைகளை!
அரித்துக் கொண்டேயிருக்கிறது.!
என் தரப்பு உணர்வுகள் பொருட்டே இல்லை உனக்கு.!
சமாதானத்திற்கான கயிற்றை வீசத் துவங்குகிறாய்.!
வெற்றியாய் நீ உணர்வதற்குள்!
உன் கயிற்றில் சிக்குண்டு மூச்சுத் திணறி!
மரண அவஸ்தையடைகிறேன் நான்.!
காற்றில் சிக்குண்ட காகிதமாய்!
சிதைகிறது மனம்.!
கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு நான்!
வருவதற்குள் மீண்டும் ஓர் முறையாய்!
சமாதானக் கயிற்றை வீசுகிறாய் நீ!
மறுபடியும் செத்துப் பிழைக்கிறேன் நான்.!
ஆனாலும் நீ சொல்லிக் கொள்கிறாய்!
எப்போதும் நடுநிலையிலிருப்பதாக!!!
!
02.!
வாழ்விக்கும் மரணம் !
--------------------------!
காலச்சக்கரம் பதிப்பிக்கும் !
அழுத்தமான காலடிச்சுவடு !
மரணம்! !
விதியை மீறாமல் !
விதிவிலக்கில்லாமல் !
வேறுபாடு எதுவும் காட்டாமல் !
மனித இனத்தைத் தழுவும்! !
உடலும் மனமும் !
அவதியுற்ற பொழுதும் !
இந்த விருந்தாளியை- !
வரம் தரும் விருந்தை !
வரவேற்க யாருக்கும் !
மனம் இருப்பதில்லை! !
மோப்பக் குழையும் !
அனிச்சம் இல்லை அவன். !
முகஸ்துதி முக்கிய அலுவல் !
எதுவும் கேளாச் செவிடன். !
பாரபட்சப் பார்வை இல்லாதவன். !
இந்த மரணம் தான் !
புண்ணியம் தேடத் தூண்டுகோல். !
சீரிய தலைமுறையைச் !
செதுக்கும் சிற்பி. !
மனித மனத்தின் ஆசை !
வெள்ளதிற்கான தடுப்பனை!!
மரணம்- !
மட்டுமில்லாது போனால் !
மனிதம் என்னும் !
சொல்லின் பொருள் !
மரணித்திருக்கும்! !
தன் மழலைகளைத் !
தானே தின்று தீர்க்கும் !
மீனின் இயல்பிலேயே !
மானுடமும் !
மரணித்து வாழாமல் !
வாழ்விப்பது மரணம் தான்

நீ பற்றிய நினைவுகள்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மெல்லக் கசியும்!
நினைவு ஓடையின்!
துவாரங்களில் ஒட்டிய வண்ணம்!
உட்கார்ந்து கவிதை படிக்கும்!
உன் ஞாபங்களை!
என் கண்ணீர்த் துளிகள்!
வலியோடு பாடுகின்றன !
சிறு தீப்பொறி பட்டு!
சீதைவடைதளிலும் பார்க்க!
இன்னும் அதிகமான வேதனைகளை!
சுமந்த வண்ணம்...!
என் நாட்கள் கழிகிறது!
மீள முடியாத!
ஒரு சோகத்தை தந்துவிட்டு!
ஒரு நட்சத்திரமாக!
நீ கிளம்பிச்சென்ற பின்னும்!
என் ஜன்னல் கம்பிகள்!
உன்னைப்பற்றியே!
இன்னும் பேசுகின்றன

விலை நிலம்

முத்துவேல்.ச
பக்கத்து நிலமும்!
ஒருகாலத்தில் என்னைப்போலவே!
வனமாகத்தானிருந்தது.!
பொறுப்புள்ள ஒருவனின்!
உடைமையானதும்!
கொஞ்சநாள் நெல்!
விளைவிக்கிறது.!
கொஞ்சநாள் நிலக்கடலை!
விளைவிக்கிறது.!
கொஞ்சநாள் சூரியகாந்திப்பூக்களை!
விளைவிக்கிறது.!
கொஞ்சநாள்!
ஓய்வாக இருக்கிறது.!
தண்டவாளம் சுமந்துகிடக்கும்!
என்மீது எப்போதும்!
மூச்சிரைத்தபடியும்!
இளைப்பாறியபடியும்!
தடதடத்து ஊர்கின்றன!
விதவிதமாய் ரயில்கள்!
கழிவுகளைத் துப்பியபடி.!
!
-முத்துவேல்.ச

உணர்வலைகள்

சத்தி சக்திதாசன்
மனமெனும் !
கடற்கரையில் !
ஓயாமல் அடித்தது !
ஓங்காரமான !
உணர்வலைகள் !
கன்னி அவளைக் !
கண்டதும் !
கண்களில் எழுந்து !
அடித்ததொரு !
காதல் அலையே ! !
அழகாக கண்ணாடிக் !
கூட்டினில் !
அடுக்கிய !
தின்பண்டங்களைக் !
கண்டதும் !
அடித்ததங்கே !
பசியலையே ! !
ஆலய வாசலினிலே !
கால்கள் !
பதிந்தவுடன் !
மனமென்னும் இருள் !
வீட்டில் !
ஒளியேற்றி !
அடித்ததொரு !
அருளலையே ! !
அன்னை , தந்தை !
ஞாபகங்கள் !
நெஞ்சினிலே !
நிறைந்திடுகையில் !
துயர் பொங்க !
கண்களிலே அணை !
கட்டும் நீரதனால் !
உயர்ந்ததொரு !
அன்பலையே ! !
ஆசிரியர் பள்ளியிலே !
அழகாக !
உன்னத எதிர்காலத்திற்கு !
உதவியாய் !
புகட்டிய புனித அலை !
அறிவலையே ! !
இத்தனை அலைகளையும் !
தாங்கிய இதயமெனும் !
கடற்கரையோ !
இன்றுவரை !
பலருக்கும் புரியாத !
ஓர் புதிரலையே ! !
-சத்தி சக்திதாசன்

கானல் நிழலில் இளைப்பாறும்

நிந்தவூர் ஷிப்லி
சிங்கங்கள்!
----------------------------------------------------------!
கனவுகள் பிடுங்கப்பட்ட இந்த நகரம் பற்றி!
புதையுண்ட சடலங்கள் ஏராளமான கதைகளை!
காற்று வெளியில்!
பேசிக்கொண்டேயிருக்கிறது ஏகாந்தமாய் ஆழ்ந்த ஏகாந்தமாய்..!
நெருப்பில் எரிந்தபோன ஒரு இனத்தின் வரலாறும்!
நூற்றாண்டுகளாய்த்தொடர்ந்த ஒரு யுகத்தின் முடிவிடமும்!
இந்த நகரின் மத்தியில் சாம்பலானது!
சடலங்களோடு சடலங்களாய்..!
இன்றும் என் செவிகளில் கர்ச்சிக்கிறது!
மனிதத்தை மனிதம் தின்றும் கொன்றும் அடக்கியும் முடக்கியும்!
கொக்கரித்து எக்காளமிட்டபோது தண்ணீர் தண்ணீர் என்று கதறி அழுத!
எத்தனையோ ஆயிரம் குரல்களின் பரிதவிப்பும் பதைபதைப்பும்..!
வனப்பு நிறைந்த நிலத்தின் மேற்பரப்பில்!
பேரவலங்கள் நடந்து கொண்டிருந்தபோது சாட்சியாய்!
இருந்ததது அந்த ஆகாயம் ஒன்றுதான்..!
தொலைந்து போன உறவுகளும்!
மூர்ச்சையான உணர்வுகளும்!
அடையாளமிழந்த மனித இருப்புக்களும்!
அபிவிருத்தி என்ற இரும்புக்கால்களினால் நசுக்கப்படுவதை!
பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..!
சுயமிழந்த உரிமைக்குரல்களின் குரல்வளைகள்!
அறுக்கப்பட்ட அடையாளமாய்!
சிதறிக்கொண்டிருக்கின்றன சில பல குருதித்துளிகள்..!
வேட்டையாடி முடிந்த பின்னர்!
சிங்கங்கள் இளைப்பாறத்தொடங்கியிருக்கின்றன!
பணத்தினதும் புகழினதும் கானல் நிழலின் கீழ்..!
கடைசியாய் ஒள்றைச்சொல்லத்தோன்றுகிறது!
புத்தரும் போதிமரமும் மலிந்து போன நாட்டில்!
இன்னும் ஏன் 'அவர்களுக்கு' ஞானம் வரவில்லை ????

போய்வா அம்மா போய்வா

ரவி (சுவிஸ்)
(தனது 86வது வயதில் 08.12.2010 அன்று என்னைவிட்டுப் பிரிந்த என் அம்மாவின் நினைவாக...)!
!
பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று!
வீரிட்டுப் பறந்து வந்தது உன்!
மரணச் சேதியுடன்.!
அம்மா!!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை!
அது தன் சின்னக் காலால்!
கோதிக்கோதி என்!
மனதைக் கசியவிட்டது.!
யாரொடு நோவேன்! !
முதுமையும் குழந்தைமையும்!
சந்திக்கும் புள்ளியில் நீ நின்றதை!
அறியாமை!
அந்நியமாய் எதிர்கொண்டதால் நீ!
மனம்நொந்த கணங்கள் எனக்கு!
முக்கியமானவை.!
மறவேன், நான் மறவேன்!
உனது இறப்பின் இறுதிக் காலங்களையும் அவை!
பின்தொடர்ந்ததை என்னவென்பது! !
வாழ்வு எல்லா இடறல்களையும்!
தாண்டிபடி நகர்கிறது.!
இழந்தவைகளை இனி!
என்னால் மீட்க முடியாது!
இப்போ உன்னையும்!!
நட்புகளும் உறவுகளும் வருவதும் போவதுமாக!
முரண்களில் சிதறுவதாக,!
தப்பிப்பிழைத்தவை கைக்கெட்டாதவையாகவும்கூட!
போய்விடுகிறது!
அம்மா, நீயோ!
எப்போதும் நீயாகவே இருந்தாய். !
ஆனாலும் பார் அம்மா,!
வாழ்வின் சுமைகளை நீ தாங்குவதும்;!
களைப்பதுமாய் இருந்த பொழுதுகள் என்!
சிறுபராய மனதில்!
ஆணியால் அடிக்கப்பட்டுவிட்டன.!
பஞ்சத்தால் ஓர் ஆட்சிக் காலம்!
பரீட்சித்துப் பார்க்கப்பட்டபோது!
வாழ்க்கையை நீ இழுத்துச் சென்ற!
தடங்களை மறத்தல்கூடுமோ! !
உனது மடியை!
துயர் கரைக்கும் தலையணையாக நான்!
உணராத பொழுதுகளே இல்லை.!
எனைத் தாங்கும்!
என் கவிதை தனித்துப் போய்விட்டது.!
கண்ணீர் எனது துயரத்தைக் கரைத்தழிய!
தனிமை சுகம் தருகிறது. !
போய் வா அம்மா!
போய் வா,!
நாற்பது வருடங்கள் நீ!
தந்தையாய் தாயாய் ஆற்றிய!
பாத்திரம் மகத்தானது.!
என் தந்தையின் மறைவை!
தொலைதூரமாய் நீ கடந்துவந்தும்!
நினைவுகளை காவிவந்தாய்.!
கண்ணீராலன்றி!
வைராக்கியங்களினால் கட்டியெழுப்பினாய் உன்!
இருப்பை எமக்காய்.!
நாம் வாழ்ந்தோம்!
நாமாக வாழ்ந்தோம்!
படித்தோம், குடும்பமாய் விரிந்தோம்!
அடிமரமாய் நின்றாய்.!
ஆலமரமாய் நீ விருட்சித்ததால்;!
பரப்பிய விழுதுகளில்!
நாம் எழுந்தோம் !
ஆனாலும் பார் அம்மா!
உனது விழுதுகளும் அடிமரமாய், பின்!
சிதைவுகளாய்ப் போமென்பதை நான்!
மறவேன், ஒருபோதும் மறவேன்!
மறந்தேனெனின் நாளை நான் தனிமரமாய்!
உணர சபிக்கப்படுதல்கூடும். !
கண்காணா!
அன்றி என் புலனுணரா கடவுளர்க்காய்!
ஊனுருகி உருவழியும்!
நிலையில் நான் இல்லை.!
உனக்காய் நான் வடிக்கும்!
சிறுதுளி கண்ணீரும் என்!
மனத் தீபமும் உனை!
நினைவில் வரைந்துகொண்டேயிருக்கும்.!
நீ வாழ்கிறாய்!
என்னுடன் நீ வாழ்கிறாய் !
சாமப் பொழுதுகளில்!
கைவிளக்கு வெளிச்சத்தில் நானும்!
புத்தகங்களுமாய் இருந்தபோதெல்லாம்!
அருகில் அமர்ந்திருப்பாய நீ.!
ஒரு தேநீரையோ பழங் கஞ்சியையோ!
அல்லது முட்டைக் கோப்பியையோ தன்னும்!
தந்துவிடுதல் உன் பணிவிடையாய்!
எண்ணிக் காத்துக் கிடப்பாய்!
சுவரில் சாய்ந்து நீ!
நித்திரையில் தியருறுவதும் விழிப்பதுமாய்!
அசைந்த அந்தக் கணங்களை!
நான் மறவேன்!
ஒருபோதும் மறவேன். !
மழைக்கால ஒழுக்குகளை ஏந்திய!
பாத்திரங்களுக்குத் தெரியும்!
இக் கதைகள்.!
எண்ணெய் வற்றி!
தீபம் கருகிய!
கைவிளக்குக்கும் கூடத் தெரியும் இவை. !
இலக்குத் தவறி வீழ்ந்தேன்தான் நான்.!
ஆனாலும்!
மீண்டும் மீண்டுமாய் எழும்!
பீனிக்ஸ் பறவையானேன், நீ!
ஊட்டிய ஆளுமையில். !
பல்லாயிரம் மைல் தூரமும்!
ஒரு கடப்புத் தூரமாய்; கரைந்துபோனது பார், உன்!
பிரிவுச் செய்திகேட்டு நான்!
ஓடோடி வந்தபோது.!
இன்றோ!
இன்னுமின்னமுமாய் நீண்டுபோய்க் கிடக்கிறது!
இந்தத் தூரம்!
வேலை என்ற பெயரில்!
எனைப் பிழிந்துகொண்டிருக்கும் ஆலை!
என் வெறுப்பிலிருந்து விலகிக் கொண்டது!
நான் இங்கு திரும்பி வருகையில். !
போய்வா அம்மா போய்வா!
ஒரு தொகை நினைவுகளை!
புரட்டியபடி உனை நான்!
வாசித்துக்கொண்டிருப்பேன்,!
ஓராயிரம் நூல்களாய் விரிந்து!
கிடக்கிறாய் நீயென் மனவகத்தில்.!
போய்வா அம்மா போய்வா!!
இன்னொருமுறை நீ என் அம்மாவாதல்கூடுமோ என!
ஏங்க அறிவு அனுமதிப்பதாயில்லை!
என்றபோதும் நான் ஆசைப்படுகிறேன் அம்மா!
உனைவிட்டுத்!
தொலைதூரம் பிரிந்திருந்த காலத்தை நிரப்பிவிட! !
!
- மகன் ரவி !
28.12.2010