பக்கத்து நிலமும்!
ஒருகாலத்தில் என்னைப்போலவே!
வனமாகத்தானிருந்தது.!
பொறுப்புள்ள ஒருவனின்!
உடைமையானதும்!
கொஞ்சநாள் நெல்!
விளைவிக்கிறது.!
கொஞ்சநாள் நிலக்கடலை!
விளைவிக்கிறது.!
கொஞ்சநாள் சூரியகாந்திப்பூக்களை!
விளைவிக்கிறது.!
கொஞ்சநாள்!
ஓய்வாக இருக்கிறது.!
தண்டவாளம் சுமந்துகிடக்கும்!
என்மீது எப்போதும்!
மூச்சிரைத்தபடியும்!
இளைப்பாறியபடியும்!
தடதடத்து ஊர்கின்றன!
விதவிதமாய் ரயில்கள்!
கழிவுகளைத் துப்பியபடி.!
!
-முத்துவேல்.ச

முத்துவேல்.ச