தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உறவு

நிலா மகள்
சில நேரங்களில் !
என் உறக்கத்தின் போதும் என்னோடு!
உறவாடிக்கிடப்பாயே!
உறங்காமல்....!
நீ ஓட்டப் பந்தய வீரனல்ல இருந்தும் !
நீ ஒடுவதால் தான் உனக்கும் என்னகும் !
ஒர் உன்னத உறவு !
இன்னும் தொடர்கிறது..... !
உன்னைப் படைத்தவனுக்குத் தொரியுமா? !
நான் உன் சொந்தக்காரனென்று..... !
உனக்கு ஞாபகமிருக்கிறதா !
ஒரு நாள் !
உன் முகம் முழுவதும் கண்ணிர்த்துளிகள்.... !
கேட்டதற்குச் சொன்னாயே !
ஒர் காரணம் !
மன்னித்துக்கொள் தெரியாமல் நனைத்து விட்டேன்... !
மனிதருக்குத்தான் நிறைய !
போலி முகங்கள் !
உனக்கு என்றும் ஒர் முகம் தான்.. !
உன்னை என் தாத்தா வைத்திருந்தாராம் பின் !
என் தந்தை வைத்திருந்தாராம் !
இப்போது நீ என்னிடம.... !
உன் துடிப்பும் !
என் இதயத்துடிப்பும் ஓன்றுதான்..!
நீ!
சோம்பிக்கிடந்தால் !
உன் காதைத்திருகுவேன் !
உடனே துடிப்புடன் சுழல்வாயே.. !
என் அருமைக் கை கடிகாரமே... !
இராண்டு !
நாட்களாய் நீ இன்றி !
உன் முகமின்றி !
என் கை தோன்றுகிறது!
விதவையாய்

மாய ஒளிசிதறும் திசை நோக்கி

எம்.ரிஷான் ஷெரீப்
ய பயணம்!
-------------------------------------------!
அவளது பிரயாணத்தின் குறுக்கீடான!
அகன்ற வாயிலைத் திறந்தபோது!
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை!
வேட்டை நாயொன்றைப் போலவந்து!
சதைகள் கவ்வமுயன்ற பொழுது!
வேடிக்கை காட்டித் !
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு!
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க!
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை!
அவளுடல் பாகங்கள் குறித்தே!
சாத்தானுக்குக் குறியிருந்தது!
சூழச் சூழ வந்து அவளைத்!
தொட்டணைத்துத் தன் !
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்!
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று!
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று!
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை !
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று!
கீறல்கள் மட்டும் சுமந்து!
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்!
எம்பி எம்பியது அவளிடம் வர!
முயற்சித்தபடியேயிருக்க!
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்!
திசைமாறிற்று!
இன்று !
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட!
நெடுஞ்சோலைகள் தாண்டிப்!
பசும்வெளிகள் தாண்டி!
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி!
நிலவற்ற நடுநிசிகளில் கூட!
அவனது மெல்லிறகுகள் கொண்ட !
அருட்கரங்களைத் தேடியே!
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க!
அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே!
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?!
விழிநீரழித்த மாயக்கரமே!
நீயறியாயோ பிரவகிக்கும் !
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை

ஈழ மண்ணில் ஓர் ஊழித் தாண்டவம்

கிரிகாசன்
என்ன கோபம் எங்கள் மீது இறைவா!
ஏது பிழை நாம் இழைத்தோம் இறைவா!
சொன்ன மொழி செந்தமிழே தவறா- இதில்!
சொல்லரிய குற்ற மென்ன தலைவா!
வானமது ஏறி நடந்தோமா - உங்கள்!
வானுலகில் தீது புரிந்தோமா!
ஆனதொரு கோபுரங்கள் ஏதும்!
அழித்திடித்து மோசம் விழைத்தோமா!
வேலெடுத்து சூலம் பறித்தோமா -அங்கு!
விளையாட உடுக்கை எடுத்தோமா!
தேவர்களை கேலி புரிந்தோமா ஒரு!
தேவமகள் கூந்தல் இழுத்தோமா!
தாவி முகில்ஏறி நடந்தோமா - சிவன்!
தலையிலுள்ள நிலவில் நடந்தோமா!
ஏனிழைத்த குற்றமென்ன இறைவா நீ!
எம் குலததை வேரறுத்தல் சரியா!
ஏன் புரிந்தாய் சுடலை ஆடும் சிவனே உன!
திருநடத்தால் செத்தது எம்இனமே!
ஊன் உருகி சாம்பல் மேடு ஆச்சு- இனி!
ஓடிவந்து அள்ளி மேனி பூசு!
படைத்தவனோ பிரம்மன் பார்க்கவில்லை - கடல்!
பள்ளிகொண்டான் எழுந்து காக்க வில்லை!
அழித்துவிட்டாய் நீயும் தமிழ் மண்ணை. இப்போ!
கொடுத்தென்ன புத்தனுக்கு மண்ணை!
கால் மிதித்து கச்சை யுடுத்தாயே வேங்கை!
தோல் உடுத்த கோபம் இன்னும் உண்டோ!
வேல் விழித்த உமை கொடுத்த பாகா -உன்!
கால் உதைக்க நாம் கிடைத்ததேனோ!
பாழுமுயிர் தானெடுக்க எண்ணின் அது!
பறித்தெடுக்க இது உனக்கு வழியா !
ஊழி நடமாடி உயிர் கொள்ள உனக்!
கொருமுறையும் இது விடுத்து இலையா!
ஆழிசூழ் உலகறியா கோரம் - மனம்!
அஞ்சும் இதை சொல்வதற்கு யாரும் !
மாளும் உடல் பட்ட வதை கொஞ்சம் அல்ல!
மரணம் என்ற பெயர் இதற்குமல்ல!
பிள்ளைபசி என்றழு மோர் தாய்க்கு!
பின்னிருந்து குண்டு வெடித்தததிரும்!
தள்ளிஒரு பிணம் நடந்து வீழும்!
தலைசிதறி துண்டெனவே ஓடும்!
மெய்சிலிர்த்து அச்சம் உச்சம் ஏறும்!
மிரண்டு பிள்ளை நீர்விடுத்துசோரும்!
கையில்லாம லொருவர் ஓடக் காணும் - கண்!
காட்சி கண்டு பஞ்சடைந்து போகும்!
நெஞ்சிடித்து வேகமாக நோகும்!
நினைவழிந்து கால்கள் சோர்ந்து சாயும்!
கண்ணெதிரே கணவன் உயிர்போகும்!
கதறியழ குரல் அழிந்துபோகும்!
துள்ளியோடி தப்பு என்று கூறும் மனம்!
மெல்ல எழ வீடிடிந்து வீழும்!
உள்ளிருந்து பிள்ளை அய்யோ என்கும்!
வீழ்ந்தசுவர் கால் பிடிக்க கதறும்!
பெண்குழந்தை இன்னொருத்தி ஓடும் முற்றம்!
போக ஒரு குண்டு அயல் வீழும்!
கண்ணெதிரே புகையெழுந்து மூடும்!
கண்டதுண்டமாகி உடல் சிதறும்!
பங்கருக்குள் ஒர்குழந்தை ஓடும்!
பாத்திருக்க மண்இழுத்து மூடும்!
புத்தன் பாதை வந்தவர் மண் போட!
பூமிஉயி ரோடுஅள்ளித் தின்னும்!
இத்தனையும் பார்த்து அவள் ஓட!
எங்கிருந்தோ சிங்களவர்வந்து!
குத்தியவள் நெஞ்சு கிழித்தோட!
குருதிவழிந்தே நிலத்தில் வீழ்வாள்!
பாதிஉயிர் போக யாதும் எண்ணி!
பரிதவித்து உடல்தகித்து நோவாள்!
வெயி லெறித்து நிலம்கொதிக்க தாகம்!
விட்டமீதி உயிரெடுத்துப் போகும்!
பீதி கொண்டு கத்தும்குரல் கேட்டு!
பிணங்களோடு பிணங்களாக சேர்ந்து!
போகுமுயிர் காக்கவென கிடந்தோர் - பலர்!
பிழைக்கவில்லை குழி பறித்து போட்டான்!
கவிபடிக்க குற்றம் கண்ட கீரன் தன்னை!
எரித்துவிட்டாய் ஏதும் எண்ணமுன்னே!
கொடிய புத்தஅரசு எம்மைக் கொல்ல!
கூடி நின்று வேடிக்கையா பார்த்தாய்!
முத்தெனவே வீரமுடன் விளைந்த பெரும்!
சொத்தினையே இழந்து விட்டோம் இறைவா!
ரத்தம் எல்லாம் போனபின்பு தமிழன் - வெறும்!
வைக்கல் பொம்மைதானே என்ற நினைவா!
இல்லை ஈழமைந்தர் புதைந்தாலும் அவர்!
எண்ணியது போவதில்லை என்றும்!
வில்லை விட்டு ஏகும் அம்புபோல - இவர்!
வீறுகொண்டெழுந்து செயல் கண்டார்!
அல்லன போய் ஆதவனாய் ஒளிர்வான் ஈழ!
அரசுவரும் ஆட்சியிலே அமர்வான்!
வெல்லவென பிறந்தவனாம் விதியே உன்!
வினைமுடித்து ஓடு தமிழ்வெல்வான்

தனிமை விழுங்கும் தோல்வி

ஆறுமுகம் முருகேசன்
யாருமில்லா இடமொன்றில்!
ஓவென்று அழுவதாய் !
தொடங்கும் பாடலொன்றிலிருந்து!
நைசாக நழுவுவதென!
வேகமாக வந்துவிடுகிறார்கள்..!
நெடுநேரம் பேசுகிறார்கள்,!
நட்பின் கை கொண்டு!
காதலின் தோள் பற்றியேறி!
காமத்தின் கதவு முன்நின்று!
ஏனோ உள்செல்ல தயங்கி!
மௌனமாக திரும்பி விடுகிறார்கள்.!!
பின்னொரு நாள்!
சம்மதமேதுமில்லாத!
நம்பிக்கை மனிதர்கள்!
நைசாக தட்டிவிடுகின்றனர், !
ஒலிக்கத்துவங்குகிறது..!
யாருமில்லா இடமொன்றிலென துவங்கும் பாடலொன்று

காதல் தூக்கு

மழை காதலன்
எப்பொழுதோ நிகழ்ந்த !
மூன்றாம் பிறை நாளின்!
சந்திப்பு இருவருக்கும் !
முக்கியமாகி போனது!
கண்கள் சந்தித்த அந்த சில நொடிகளில்.....!
கையில் கிடைத்த !
சிறு சணல் குப்பைகளை!
விருப்பமாய் கொண்டு !
பின்னபபட்டது காதல் கயிறு...!
சரியாய் பொருந்தியது!
அவரவர் குரல் வளைக்கு!!!
தலைகள் தவிர்த்து வெளியே!
வர மனமின்றி!
தொடரும் கதறல்!
மூச்சிரைப்பு !
நம் காதல் என்...!
தூக்கில் தொங்கிய பின் !
அவசர விடுதலைக்காய்!
பிரார்த்திக்கிறோம் !
முகம் தெரியாத!
மற்றவர்களின் வருகைக்காய்....!
கடந்த காலத்தின் சுகங்கள்!
நிகழ் கால சோகங்கள்!
இவற்றோடு!
புலன்கள் திணறி !
வாழ்வின் நிமிடங்கள்.....!
காட்டு பூவின் மனத்தை !
நுகர செய்து!
வாசனைகளை பட்டியலிடும்!
கடைசி நேர!
உயிர் காற்று....!
நதியில் பிடித்த வண்ண மீன்களை!
உன் வீட்டு கண்ணாடி குடுவையிலும்!
அதிகாலை பறவையின் குரலை!
உன் வீட்டு அழைப்பு மணியிலும்!
பூ ஒன்றின் மென்மையை !
உன் வீட்டு தோட்டத்திலும்!
கண்டு கொண்டாடிய என் நேற்றைய வினாடிகள்!
இதமாக்குவது போல்!
இறுக்கமாக்கி போகிறது தலைகளை...!
நிச்சயமாய்!
இருந்து விடாத !
புத்தகம் ஒன்றையும்!
சொல்லாத வார்த்தைகளை!
சொல்லவும்!
அடிக்கடி வந்திருக்கிறேன் உன்னிடம்....!
இன்றோடு!
முடிந்து விடப்போகிறது என்!
நினைக்கும் இறுக்கம்!
தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
நிகழ் கால !
கனவுகளின் நிஜமான!
இறுக்கத்தில்...!
-------மழை காதலன்

தென்றல்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
காற்றுகள் பல வந்தும் !
கலங்கிடாமல் நிற்கின்ற !
ஆற்றலுள் ளொன் நானென்று !
அகங்காரம் கொண்ட ஒரு !
வாட்டமுள்ள ஆல மரம் !
வாழை யொன்றை நோக்கியது!!
சிறியவனே நீ இந்தச் !
செகத்தினிலே வாழ்ந்து விடும் !
அரு கதையோ சில காலம் !
அறிவாயோ என்று ரைத்துப் !
பெருஞ் சத்தம் போட்டுத் தன் !
பேரிரைச்சலைக் காட்டியது !
வாழை மரமோ வாய்திறவா(து)!
வருத்தமுடன் நிற்கையிலே !
காலையிலே வீசிய புயற் !
காற்றதனால் எதிர் நின்ற !
அவவால மரம் விழுஞ் சத்தம் !
அவ் வாழைக் கொலித்ததுவாம் !!

மண்ணே கேள்

முருகடியான்
மண்ணே கேள்!!
-----------------------!
ஆழி யாற்றைக் கட்டிக் கொண்ட!
அழகு மண்ணம்மா! -உன்!
அடிவ யிற்றில் நெருப்புக் குண்டம்!
இருப்ப தென்னம்மா?!
வாழி போற்றி நாங்கள் பாட!
மகிழும் மண்ணம்மா! -கொடு!
வாய்தி றந்து நெருப்பு வாந்தி!
எடுப்ப தென்னம்மா?!
சின்ன கொண்டை பெரிய கொண்டை!
மலைக ளானதோ? -நீ!
சீறும் போது வேர றுக்கும்!
அலைக ளானதோ?!
வண்ணங் கொண்ட குன்ற னைத்தும்!
மார்ப கங்களோ? -அதில்!
வழிந்து சிந்தும் அருவி எல்லாம்!
பாற்சு ரங்களோ?!
மாழை நூறு மடிசு மந்து!
மலர்கள் பூக்கிறாய்! -அதை!
மனிதன் தோண்டி எடுக்கும் போது!
பொறுமை காக்கிறாய்!!
ஏழை நாங்கள் தூங்கும் போது!
எட்டி உதைக்கிறாய்! -உன்!
இனிய மக்கள் உயிரை உடலை!
ஏனோ புதைக்கிறாய்?!
மேனி எங்கும் மயிர்க ளாக!
பயிர்க ளானதோ? -அதை!
மேய்ந்தி ருக்க வாழ்ந்தி ருக்க!
உயிர்க ளானதோ?!
தானி யங்கும் தன்மை அந்தத்!
தலைவன் தந்ததோ? -எங்கள்!
தமிழும் அந்த முறையில் தோன்றி!
நிலைத்து நின்றதோ?!
உனக்குக் கூட நொடித்துப் போகும்!
கால முள்ளதோ? -உன்!
உறவை நம்பும் மனிதப் பயிரை!
அழித்தல் நல்லதோ?!
கணக்கில் லாமல் உயிரைத் தாங்கும்!
காதல் கண்ணம்மா! -எம்!
கால்மி திக்கப் பொறுத்த ருள்க!!
நன்றி மண்ணம்மா!!
-பாத்தென்றல்.முருகடியான்

வைகாசி வலி

வதனிநேசன்
துரோகத்தனத்தின் !
எச்சங்களாய் !
எலும்புக் கூடுகள்.!
துப்பாக்கிகளின் !
ஆக்கிரமிப்பில் !
நினைவகங்கள்.!
ஒரு கத்தி போல் !
குத்துகிறது !
முள்ளிவாய்க்கால் தீ....!
விழுவதும் ....!
எழுவதும் ....!
யுத்தம் கொண்ட !
இயல்பு.!
நாங்கள் !
வீழ்த்தப்பட்டோம்!
மறுபடி எழுவோம் !
மகாதீரராய்

பறவைகளே

முருகடியான்
பட்டுச் சிறகை விரிக்கின்றீர்!
பவள அலகால் கொறிக்கின்றீர்!
எட்டுத் திசையும் பறக்கின்றீர்!
இன்னிசைத் தேனைச் சுரக்கின்றீர்!
!
கேள்விக் குறிபோல் சிலமூக்கு!
கிளருங் கால்களில் உகிரூக்கு!
வாள்போல் அலகுடன் வாயாச்சி!
வான்வெளி பறப்பதும் ஆராய்ச்சி!
!
நெல்லிக் காய்போல் தலைகொண்டீர்!
நீள்மரக் கிளைகளில் துயில்கொண்டீர்!
பள்ளிக் குழந்தைகள் போலாகிப்!
பகல்வரு முன்னே பறக்கின்றீர்!
!
கையை விரித்துக் கால்மடக்கிக்!
கண்படுந் தூரம் பறந்துவிட்டு!
பையவே மண்ணில் இறங்குவதைப்!
பார்த்தே படைத்தார் வானூர்தி!
!
துமுக்கிப் பேரொலி கேட்டவுடன்!
துடித்துப் பறக்கும் பறவைகளே!
தமுக்கித் திரியா நற்குணங்கள்!
தாங்கிய நீங்களும் உயர்திணையே!!
!
கழுகைக் கண்டால் அஞ்சுகின்றீர்!
காதலில் குஞ்சினைக் கொஞ்சுகின்றீர்!
பழுதறி யாமல் வாழ்கின்றீர்!
பகுத்தறி வாளரை ஆள்கின்றீர்!!
!
-பாத்தென்றல் முருகடியான்

காற்று வற்றிய காரணம்

மு. பழனியப்பன்
மு, பழனியப்பன் !
விதம் விதமாய் மனிதர்கள் !
மளிகைக் கடையில் !
பொறுப்போடு !
பொருள் வாங்கி !
வெளியில் வந்தால் !
ஏறிவந்த இருசக்கர வண்டி !
காற்று வற்றிக் கிடந்தது !
உடன் வந்த !
மனைவி !
முணுமுணுக்கிறாள். !
நீங்களும் சரி !
உங்கள் வண்டியும் சரி !
சரியான நேரத்திற்கு உதவாது என்று !
காற்று வற்றிப்போனதற்கான !
காரணம் என்ன !
என மனம் தேடியபடி !
எங்களின் ஊர்வலம் !
வண்டி, !
வண்டியைத் தள்ளியபடி நான், !
என் பின்னால் குழந்தையைத் தூக்கியபடி மனைவி, !
புதிய பள்ளங்களைத் தோண்டிப்போடும் !
கூலியாட்கள் !
பள்ளங்களின் வெளிப்பாட்டில் !
வீதிக்கு வந்த கற்கள் !
யாரை நோவது !
காற்று வற்றியதன் காரணம் !
மளிகைக்கடை வாசலில் !
பார்க்க வினோதமாய் !
ஒரு சிறுவன் !
வெளிவந்த எங்களின் அசைவையே உற்றுக் கவனித்த !
அவனின் சிறப்பு கவனம் !
அவன்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் !
!
கடை அடைந்து !
காற்று வற்றிய காரணம் கண்டுபிடிக்க முயல !
கடைக்காரர் கேட்டார் !
யாருக்காவது இடைஞ்சலாக வண்டியை !
நிறுத்தினீர்களா? !
காற்றைப் பிடுங்கி விட்டிருக்கிறார்கள் !
சரி !
சரி !
சரி செய்த வண்டியோடு !
பயணம் !
நல்லவேளை !
டயர் டியுப்க்குப் பழுதில்லை