தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மலரின் மரணம்

வல்வை சுஜேன்
மலரே... !
நீ அழகே அழகு!
மொட்டாக இருக்கையில்!
தொட்டதில்லை சூரியனும்!
உன் பட்டு இதழ்களை !
சிட்டுக்களின் மகுடியில்!
மொட்டுதழை ஏன் விரித்தாய்!
பட்டுக்குஞ்சம் நடுவே!
நீ சொட்டுத் தேன் கொடுத்தாலும்!
சிட்டுக்கள் உன்னிதழ்கள் மேல்!
வைத்துப் போவது!
ரணங்களின் வடுவே !
அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்!
ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்!
துயரக் கடலில் நீ !
மூழ்குவதை கண்டுதானோ. !

மறையாத மகாத்மாக்கள்

யாழினி அத்தன்
(யாழினி அத்தன்)!
தேசிய மகாத்மாக்கள்!
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்!
காகிதங்களில்;!
ரூபாயாக!
டாலராக!
ரூபிளாக!
அந்தந்த நாட்டு!
திறந்தவெளி!
காகிதச் சிறைகளில்;!
பணங்களின் !
முகப்பில் பவனி !
வருகிறார்கள்!
மனித மனங்களில்!
மறந்துவிட்டபடியால்.!
மெலிதாய் உதிர்க்கிறார்கள்!
புன்னகையை!
செல்வந்தன் பெட்டியில்!
சிறைப்பட்ட சோகமா!
ஏழையின் வயிற்றை!
நிரப்பிய மகிழ்ச்சியாவென்று!
அறிந்து கொள்ள முடியாதபடி;!
அவர் புன்னகை!
ஏழையின் கைகளில்!
ஜொலிக்க!
அவன் ஒளிர்விடும்!
சிரிப்பில் தெரியும்!
இறைவன் இருப்பு;!
கைவிட்டு கைமாறி!
கசங்கி கிழிந்து !
வாடிப் போயிருந்தும்!
வாடாமல் மனிதர்களை!
வாழ செய்து !
மறைந்தும் மறக்காத !
அவர் தியாகங்கள்;!
கொள்கைக்கு எதிராய் !
துவேஷக் கொடிகள் !
பிடித்த பகைவர் !
விரல்கள் ஐந்தும்!
இப்போது தடவி !
மகிழ்கின்றன!
அவர் முகப்பை; !
மகாத்மாக்கள் மறைவதில்லை!
நூல்களின் உரைப்பில்!
பொதிந்து கிடக்கும்!
உண்மைகள் குலுங்கிச்!
சிரிக்கின்றன எங்கோ!
பதுங்கி நின்று;

விழியில் விரியும்.. விலகி நடந்தது

வேலணையூர்-தாஸ்
விழியில் விரியும் கனவுகளோடு.. !
விலகி நடந்தது காதல்!
01.!
விழியில் விரியும் கனவுகளோடு!
-----------------------------------------!
விழியில் விரியும் கனவுகளோடு!
காத்திருக்கிறேன்!
இதயவாசல் இன்னுமேன் அடைத்திருக்கிறாய்!
நான் உனக்காக தினமும் மலரும்!
தாமரை!
சூரியன் நீ தான் கண்டு கொள்வதில்லை.!
மல்லிகையாக புன்னகைக்கிறேன்!
அலரிப்பூவாக அலட்சியம் செய்கிறாய்!
உதயத்தை எதிபாத்து காத்திருக்கிறேன்.!
அஸ்தமனங்களை அறிமுகம் செய்கிறாய்.!
என் காதல்பாடல்களில்!
முகாரியை சேர்க்க ஏன்!
ஆசைப்படுகிறாய்.!
உன் நினைவுகள் மட்டும்!
பனிக்காற்றாய்!
ஆனால் நிஜமோ பாலை வெயிலாய்!
தகிக்கிறது.!
காற்றாய் மாறி உன் மூச்சாக மாட்டோனா.!
உன் கையில் சிறையாகி!
காதலில் கரையேனா.!
என்னை தவிர்கிறாய்!
என்பதை உணர்கிறேன் அன்பே!
ஆனால்!
உன்னையே எண்ணி!
உருகும் என் நெஞ்சு..!
!
02.!
விலகி நடந்தது காதல்!
-------------------------------!
உன் நினைவுகள் உருகி!
கண்களின் வழியே வடிந்து கிடந்தது கண்ணீர்.!
கண்ணீர் துடைத்திட விரையும்!
உன் விரல் தேடி காற்றில் அலைந்தது மனது!
கனவுகள்மட்டும் மனதினில் நிறைத்து விலகி நடந்தது காதல்!
துயரினில் தோயும் பெண்நிலை கண்டு!
தூர இருந்தது நிலவு

என்னுள் நீ

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள். !
!
1. !
என்னுள் நீ... !
என்னுள் நீ ஆகிவிட்டாய் !
உன்னுள் நான் ஆகுமுன்னே! !
அழகில்லை நீ என்றார்கள் !
அறிவும் உனக்கில்லை என்றார்கள். !
அடங்காப் பிடாரி நீ !
ஆகாது குடும்பத்திற் கென்றார்கள். !
ஆனாலும் என்னுள் நீ !
ஆகிவிட்டாய் அறியாப் பருவத்திலே! !
கள்ளம் என்றனர் உன்னன்பு !
கபடம் என்றனர் உன்காதல். !
வஞ்சகி என்றனர் உன்னை !
வாழ்வுக்காகா நீ சூத்திரக்காரி என்றனர். !
ஆனாலும் என்னுள் நீ !
ஆகிவிட்டாய் தெரியாப் பருவத்திலே! !
என்னுள் நீயாக !
உன்னுள் நானாக !
என்மடியில் நீயாக !
உன்மடியில் நானாக !
நீ நானாக !
நான் நீயாக....... ஜீரணிக்கமுடியாத !
அந்தக் காதல் நிஜங்கள் !
அற்றுப் போகவில்லை !
இன்னும் என் மனதைவிட்டு. !
ஆனாலும் என்னுள் நீ !
ஆகிவிட்டாய் என்றோ! !
நாளை நீ மணப்பெண்ணென்று !
நாசுக்காய் கூறியபோது - !
நான் நானாக இல்லாமை உணர்ந்தும் !
நடைப் பிணமாகவில்லை. !
அன்றும் நீ என்னுள் !
ஆகிவிட்டவள் என்பதனால்! !
நாட்கள் வாரங்களாகி !
வாரங்கள் மாதங்களாகி !
மாதங்கள் வருடங்களாகி !
இருபது வருடங்கள் சென்றும், !
இன்றும் என்னுள் நீ !
ஆகிவிட்டவள் தான்! !
!
காரும் பங்களாவும் !
காசும் பணமும் !
கசந்து போய் !
இத்தனை வருடங்களின்பின் !
உன்னுள் என்னை !
உள்வாங்க நினைக்கிறாயே! !
இது என்ன விந்தை!! !
உள்வாங்கல் என்பது !
வெளித்தள்ளல் போல் !
அவ்வளவு லேசுப்பட்டதல்ல - !
காதலைப் பொறுத்தவரை. !
நானும் இன்று ஓர் இதயத்தின் !
உள்வாங்கல்தான் - !
என் செல்வங்களின் !
உயிர்நாடிதான். !
ஆனாலும் என்னுள் நீ ஆகிவிட்டவள் !
என்பதனால் உன்னில் ஒரு பரிதாபம். !
என்னுள் ஆகிவிட்ட !
உன்காதலின் வெளித்தள்ளல்கள் !
என் மரணத்தின்பின் !
உன்னுள் உள்வாங்கப்படும்! !
அப்போது நான் !
ஆகியிருப்பேன் உன்னுள்

குழந்தையின் கனவுகள்

ந.மயூரரூபன்
ஊதி ஊதி மூட்டுந்தீ!
குழந்தைகளினுலரும்!
கனவுகளின் நுளைவழி தேடிச்!
சதிராடி மரவிருள் பிணைந்து!
தொங்குகிறது.!
குழந்தைகளின் கனவுகள் பார்த்திருக்க!
ஓடிக்கொண்டிருக்கிறது!
அதனீரம் பறித்த மாய ஆறு.!
தகிக்குமெங் கனவுகள்!
தொடமுடியா மாய ஆறு அது.!
ஈரந்தொலைத்த சேதி!
ஆற்றுப்படுகையில் விழுந்து!
முட்கம்பியோரமாய்!
திக்கற்றலைகிறது.!
மரவிருள் தின்னச் சுருண்டிருக்கிறது.!
கனவுகள் உலருமோசை!
வண்ணங்கள் புதைந்துபோன!
நிலமெங்கும் கேட்கிறது.!
மாய ஆற்றின் சலசலப்பும் உதிர்ந்தழிகிறது.!
ஓசைகளுடையும் சடசடப்பில்!
மரவிருள் மிடைத்து வருந்தீ!
வகுந்தேறுகிறதெங்கும்.!
கனல் கக்கும் பொழுதொன்றில்!
குழந்தையின் கனவுகள் தீயில் நனைகின்றன

கல்லும் கனியும்

கு.சிதம்பரம், சீனா
கல் அடிக்கா விட்டால்!
குள்ள நரிகள் கனியை உண்ணும்!!
நம்நாட்டு மண்ணில் வளரும்!
பன்னாட்டு பனைமரங்கள்!
எம்னாட்டு மைந்தர்களுக்கு சொந்தமில்லை!!
சுவையான கனிகளைச் சுவைத்து!
மிகையான எச்சங்களை விட்டுச் செல்கின்றன!
பன்னாட்டு அண்டங் காக்காய்கள்!!
மரம் நட மண்ணைக் கொடுத்தவன்!
காக்காய்களை விரட்ட கல்லடிப்பவன்!
சிறப்பு யாருக்கு சலசலக்கும் வேந்தர்கள்!!
காக்காய் அமர பனம்பழம் விழும்!
கொடிபிடிக்கும் குள்ள நரிகள்!
கவ்விச் செல்லும்!!
-கு.சிதம்பரம்,சீனா

கன்னித்தீவு

அய்யா.புவன்
பெருக்கலாய் வாழ்வோம் என்று!
கழித்தலாய் போன வாழ்க்கை...!
கூட்டலாக்க முயற்சி... பட்டு!!
முடியாததால்...வகுத்தலாகி!
வெற்றுக் கணமாய் ! சற்றே கணமாய்...!
என்றோ படித்த கணக்கு ஞாபகமாக!
கணக்கில் கூட கடன் வாங்கி தான்!
கழிக்க முடியும்...இப்படியிருக்க!
நாம் மட்டும் விதி விலக்க...!
கொடுத்த கடனும்...வாங்கிய கடனும்!
கன்னித்தீவு போல...!
!
-அய்யா புவன்

புதுமைக‌ளால்.. காத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌

ராம்ப்ரசாத், சென்னை
புதுமைக‌ளால் மிஞ்சும் குழ‌ப்ப‌ங்க‌ள்.. காத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்!
01.!
புதுமைக‌ளால் மிஞ்சும் குழ‌ப்ப‌ங்க‌ள்!
-----------------------------------------------!
முயங்குதல் பொருட்டும்!
சந்ததி பொருட்டும்!
வாழ்க்கைத்துணை பொருட்டும்!
முறைப்ப‌டுத்துவ‌தாய்!
எழுதப்பட்ட‌ விதிகள்!
த‌ள‌ர்த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌!
புதுமை என்ற பெயரால்...!
முன்னெப்போதும் கண்டிராத‌!
குழப்பங்கள் மிஞ்சுகிறது!
அத‌ன் பொருட்டு...!
கூண்டுக்குள் க‌ற்க‌வேண்டிய‌!
பாட‌ங்க‌ளை!
இருள் சூழ்ந்த‌ வ‌ன‌த்திலும்!
மெள‌ன‌ம் க‌விந்த‌ ம‌யான‌த்திலும்!
க‌ற்ற‌தில் என்ன‌ க‌ண்டீர்க‌ள்...!
இந்த‌ மித‌வை!
அழ‌காய்த்தான் ஊறுகிறது!
அதன் போக்கில்...!
ஆனால்,!
ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில்!
அத‌ன் க‌தை முடிய‌ப்போவ‌து!
தெரியுமா உங்க‌ளுக்கு...!
02.!
காத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்!
----------------------------------------!
வருடங்கள் கடந்தாலும்!
காத்திருப்புக்கள் முதிர்வதில்லை...!
குழல்களில் சூடுவதான‌!
கற்பனைகளின் பூக்கள்!
இன்னும் பிறந்திருக்கவில்லை...!
எப்போது பிறக்குமென்கிற‌!
தகவலுமில்லை...!
துணைக்கான‌ எதிர்பார்ப்புக‌ள்!
துணைக‌ளிட‌ம் நிரைவேறுவ‌த‌ற்கில்லை!
என்ப‌தே காத்திருத்த‌லில்!
முடிகிற‌தென்ப‌தை துணைக‌ள்!
நினைத்துப்பார்ப்ப‌தில்லை...!
கவனிக்கப்படாத வண்ணங்களின்!
கலவைகளால்!
வ‌சீக‌ர‌ம் விரும்ப‌ப்ப‌டுகின்ற‌து...!
தொலைக்க‌ப்ப‌டும் க‌ல‌வைக‌ளால்!
த‌னித்தே விட‌ப்ப‌டுகின்ற‌ன‌!
எதிர்பார்ப்புக‌ள்

உ(து)யர வாழ்க்கை

மார்கண்டேயன்
இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . . !
ஊட்டம் கொடுப்பதற்கு!
தான் உயரத்தில் நாங்கள் . . . !
உயர்வை காண முடியவில்லை!
என்றழுபவர் மத்தியில்!
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி !
எங்கள் உழைப்பின்!
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு!
உயரங்கள் அழகூட்டப்படும் !
உறங்கும் போது போனாலென்ன!
உயரத்திலிருந்து போனாலென்ன!
சிந்தனைகளிலும் உயர்ந்து தான் !
உயிர்போன பின்!
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப!
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை !
உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்!
உயிர்க்கான உத்தரவாதம்!
மட்டும் எள்ளளவும் மாறாமல் !
பயமில்லையா ? யார் சொன்னது!
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,!
என்ற பயம் தான்இ எப்பொழுதும் !
எப்பொழுதாவது உயரத்தில்!
உள்ளவர் கணக்கு உதைக்கும்!
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் !
உயர்ந்த பணி!
முடித்த தருணத்தில்!
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் !
உயரம் உருப்பெறும் போது!
உள்ளே செல்ல!
அனுமதி ஏது ? !
எங்கோ ஓரிடத்தில்!
எதுவோ சரிசெய்ய!
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் !
உடலின் உணர்வுகளும் உபாதைகளும்!
நீர்த்துபோயினும்!
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது !
உயரம் தாண்டுதலில்!
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!!
ஊருக்கு சென்று

போதும் போதும்…

செண்பக ஜெகதீசன்
எல்லா ஆயுதங்களும் !
என்னிடம் இருக்கட்டும் !
என்றுதான் !
எல்லாக் கடவுள்களும் !
கையில் வைத்துள்ளன !
கணிசமாய் ஆயுதங்கள் - !
காத்துக்கொள்ள தங்களை…! !
இருக்கட்டும் அவை அங்கேயே, !
இந்த மனிதன் ஏன் !
எடுக்கிறான் அவற்றைக் கையில் - !
கடவுள்களைக் காப்பாற்றிடவா…! !
மதமென்ற பெயரில் !
மதிகெட்டு நிற்கும் !
மனிதனே நீ !
துதித்து நின்றால் போதும் !
தெய்வங்களை, !
தூக்கவேண்டாம் ஆயுதங்களை !
தாக்கவேண்டாம் அடுத்தவரை !
போக்கவேண்டாம் ஆவிகளை, !
சிந்திய இரத்தம் போதும் !
சிந்திப்பாய் நீயே…! !
வேண்டாம் வேலிகள்…!
எல்லைக் கோடுகள் !
எப்போதும் ஆகின்றன !
தொல்லைக் காடுகளாய், !
பிறப்பில் ஒன்றாய்ப் பிறந்தோம், !
பிரிந்து நிற்கிறாயே மனிதா !
விரிந்த உலகில் !
விதவிமாய்ச் சுவர்எழுப்பி –!
நாடென்றும்..!
இனமென்றும்..!
இன்னும் என்னென்னமோ…! !
மனிதனே நீ !
பிரிவினையைக் கையிலெடுத்தால் !
வருவது சண்டைதானே, !
அதனால் !
வேலிகளை அப்புறப்படுத்து, !
அதனோடு !
வேதனையையும்தான்…!!
-செண்பக ஜெகதீசன்…!
()