விதி வைத்த முற்றுப்புள்ளி.. கருவறைச் சுகம்.. இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை!
01.!
விதி வைத்த முற்றுப்புள்ளி!
------------------------------!
மகளே!!
மூச்சுக் காற்று மட்டும்!
உரிமை கோரும்!
ஏகாந்தமான இரவொன்றில்!
உன் நினைவுகளை!
கொஞ்சம் அசை போடுகிறேன்...!
தாயின் கருவறைக்கு!
அர்த்தம் கொடுத்தவளே!!
தந்தை என் மனதில்!
பூவாய் பூத்தவளே!!
உறக்கம் இன்றிய இரவுகளில்!
உன் அழுகை எனக்கு தாலாட்டு!
அலுவலக களைப்பில் வரும் எனக்கு!
உன் அழுகை தானே வாடைக்காற்று!
தென்றல் என்னை தீண்டியதாய்...!
சாரல் என்னை சீண்டியதாய்...!
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு!
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்!
நிலவை கையில் ஏந்தியதாய்...!
பூக்களே என்னை தாங்குவதாய்!
எனக்குள் ஒரு பூரிப்பு...!
என் மடியில் உன் தலை சாயுகையில்!
பாவாய் நீயும்!
பாவை ஏந்தி!
விளையாடும் ஒரு கணத்தில்!
பூவாய் மாறி!
உன் தாய் நெஞ்சும்!
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?!
ஆயிரம் நாட்கள் காத்திருந்து!
ஆறுதலாக பிறந்தவளே!!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்!
இறைவன் விதியில் நிலைக்கலையே?!
தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது!
கனவிலாவது நீ வருவாய்!
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க!
மாறி மாறி முத்தமிடுவாய்!
02.!
கருவறைச் சுகம்!
----------------------!
அன்னையே!!
உன் கருவறைக்குள்!
மீண்டும் என்னை!
மீட்டெடுப்பாயா?!
இந்த உலகம்!
என்னை பயமுறுத்துகிறது!
உன் உதிரத்தில் நானிருந்தேன்!
உணர்ந்தது பூ வாசம் - இன்று!
உலகத்தில் நானிருக்க!
உணர்வதெல்லாம் பிண வாசம்!
நிசப்தத்தின் மத்தியிலே!
என்னை தாலாட்டியது!
உன் நாடித்துடிப்பு- இன்று!
சப்தங்களால்...!
நிசப்தமாக பார்கிறது!
என் இதயத்துடிப்பு!
மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை!
என் அசைவு மொழிகளுக்கு!
பக்குவமாய் நீ!
பதில் சொன்னாய்!
மொழிகளால் தான்!
இங்கு சிலபேர்!
எலிகளாய்...!
ஒழிய வேண்டி இருக்கிறது!
என் உலகம்!
மூடி தான் இருந்தாலும்!
மூச்சுக்காற்றுக்காய்!
தவமிருக்கவில்லை!
நான் அன்று!
அந்தமின்றி விரிந்தாலும்!
என் உலகம்- சிலவேளை!
மூச்சுவிடக் காற்றின்றி!
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று!
அன்னையே!!
உன் கருவறைக்குள்!
மீண்டும் என்னை!
மீட்டெடுப்பாயா?!
இந்த உலகம்!
என்னை பயமுறுத்துகிறது !
!
03.!
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை!
---------------------------------------------------------------!
இதயத்தை நோக்கி ஓட வேண்டிய!
என் குருதிக் கலங்கள் எல்லாம்!
உன்னை நோக்கியே ஓடி வருகிறது...!
செங்குருதி துனிக்கைகளையும்!
வெண் குருதி துனிக்கைகளையும் விஞ்சி!
உன் நினைவு துணிக்கைகளின் செறிவு!
அதிகமாய் இருக்கிறது என் குருதியில்!
எல்லா மலரையும் விட்டு விட்டு!
உன் கூந்தலை முகரவே துடிக்கிறது!
என் நாசி!
நீ விழி திறக்கையில் விடியலையும்!
விழி மூடுகையில் இரவினையும்!
மாறி மாறி அனுபவிக்கிறது!
என் உலகம்!
உன் புன்னகையினை சேமிக்க!
உன் உதடுகளின் கீழே!
ஞாபக வங்கியை!
அமைத்து வைத்திருக்கிறது என் இதயம்!
தத்தித் தத்தி நடக்கும்!
உன் பிஞ்சுக் கால் தடங்களை!
தித்திப்போடு தொடர்கிறது!
என் பாதங்கள்!
உடம்பின் ஒவ்வொரு அணுவும்!
தனித்தனியாய்!
இன்பமடைந்து களிக்கிறது!
மழலை மொழியில் நீ!
நானா! (சகோதரா) என்று அழைக்கும்!
ஒரு நொடியில்
ஜாவிட் ரயிஸ்