சொல்லிக் கொள்கிறாய்...!
01.!
சொல்லிக் கொள்கிறாய்...!
------------------------------!
இரண்டு புள்ளிகள் எதிர்நிலையடைகையில்!
இடையிலிருப்போர் நிலை பரிதாபம்தான்.!
சமாதான முயற்சிகள் பல வகையுண்டு.!
பள்ளத்தை இட்டு நிரப்பி மேடாக்கலாம்!
மேட்டைத் தட்டிப் பள்ளமாக்கலாம்!
கயிற்றைக் கட்டி இழுக்கும் வகையும் உண்டு.!
சமனப் படுத்தும் முயற்சியில் ஏனோ!
எப்போதும் நீ கயிற்றைக் கட்டி!
இழுக்கவே விரும்புகிறாய்!!
எந்த விவாதத்திலும் எதிர் நிலையிலேயே இருக்கிறாய்!
பிறரின் நியாயம் புரிவிக்கும் முயற்சி என்றாலும்!
யாருக்கும் புரியாததோ என் நிலைப்பாடு என!
ஏற்படும் குழப்பம் மனக் கரைகளை!
அரித்துக் கொண்டேயிருக்கிறது.!
என் தரப்பு உணர்வுகள் பொருட்டே இல்லை உனக்கு.!
சமாதானத்திற்கான கயிற்றை வீசத் துவங்குகிறாய்.!
வெற்றியாய் நீ உணர்வதற்குள்!
உன் கயிற்றில் சிக்குண்டு மூச்சுத் திணறி!
மரண அவஸ்தையடைகிறேன் நான்.!
காற்றில் சிக்குண்ட காகிதமாய்!
சிதைகிறது மனம்.!
கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு நான்!
வருவதற்குள் மீண்டும் ஓர் முறையாய்!
சமாதானக் கயிற்றை வீசுகிறாய் நீ!
மறுபடியும் செத்துப் பிழைக்கிறேன் நான்.!
ஆனாலும் நீ சொல்லிக் கொள்கிறாய்!
எப்போதும் நடுநிலையிலிருப்பதாக!!!
!
02.!
வாழ்விக்கும் மரணம் !
--------------------------!
காலச்சக்கரம் பதிப்பிக்கும் !
அழுத்தமான காலடிச்சுவடு !
மரணம்! !
விதியை மீறாமல் !
விதிவிலக்கில்லாமல் !
வேறுபாடு எதுவும் காட்டாமல் !
மனித இனத்தைத் தழுவும்! !
உடலும் மனமும் !
அவதியுற்ற பொழுதும் !
இந்த விருந்தாளியை- !
வரம் தரும் விருந்தை !
வரவேற்க யாருக்கும் !
மனம் இருப்பதில்லை! !
மோப்பக் குழையும் !
அனிச்சம் இல்லை அவன். !
முகஸ்துதி முக்கிய அலுவல் !
எதுவும் கேளாச் செவிடன். !
பாரபட்சப் பார்வை இல்லாதவன். !
இந்த மரணம் தான் !
புண்ணியம் தேடத் தூண்டுகோல். !
சீரிய தலைமுறையைச் !
செதுக்கும் சிற்பி. !
மனித மனத்தின் ஆசை !
வெள்ளதிற்கான தடுப்பனை!!
மரணம்- !
மட்டுமில்லாது போனால் !
மனிதம் என்னும் !
சொல்லின் பொருள் !
மரணித்திருக்கும்! !
தன் மழலைகளைத் !
தானே தின்று தீர்க்கும் !
மீனின் இயல்பிலேயே !
மானுடமும் !
மரணித்து வாழாமல் !
வாழ்விப்பது மரணம் தான்
சு.திரிவேணி, கொடுமுடி