நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்!
நிழலிலேயே!
உட்கார்ந்திருக்கிறது !!
உங்கள் கனல்களை!
அதன்மேல் கொட்டலாம்,!
சாபங்களை அள்ளியெறியலாம் ;!
அத்தனையையும் விழுங்கியது - நிலம்!
அதிர அதிரச் சிரிக்கும் !!
அதன் அருகாமை!
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்!
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,!
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்!
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் ! !
சீண்டிப்பார்க்கலாம் - அதனை!
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,!
தலைகோதித் தடவலாம்,!
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;!
அத்தனையையும் !
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து!
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !!
நுனிவிரல் தீண்டி!
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்!
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...!
இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்!
நீங்கள் இருப்பதாக!
உறுதிபட உரக்கச் சொல்வேன் ! !
நெருப்பு விழுங்கும் பறவையது!
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் ! !
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்