நீரினால் பூமி சிலிர்க்கும் தோரணை!
மழை பூமிக்குச் செய்திடும் பூசனை!
நுழையும் மூக்கில் மண் வாசனை.!
இழையும் பழக்க வழக்க வாசனை!
தழையும் மொழியால் பெறும் வாசைன!
விளையும் வட்டாரப் பேச்சு வாசனை!
குழைந்து இழையும் இப்போஷனை!
வளைந்து பெயர் பெறும் ஊர் வாசனை.!
ஈஈஈஈஈஈ!
மண் வாசனை உன் பிறப்பால்.!
உன் வாசனை உயரும் அறிவால்.!
திறமை வாசனை பெருக்கிக் காலத்தில்!
ஈழ வாசனை உயரக் கை கொடுப்போம்.!
அரசியல் வாசனைக் கேட்டினால் மண்ணில்!
உரசும் சோக வாசனை போதும்.!
ஓற்றுமை வாசனைக்கு வரியமைத்து!
ஏற்றுங்கள் மண் வாசனையை உலகறிய

வேதா. இலங்காதிலகம்