நீ சுமந்த பத்து திங்கள் வரலாறுதான் - தாயே!
அனுபவித்த வலிகள் எல்லாம் எரிமலைகள்தான்.!
நெஞ்சுதைத்த பாதங்கள் பாவங்கள்தான் - தாயே!
மார்பு கடித்த பற்கள் நான்கும் கோழைகள்தான்.!
மடி கிடந்து தவழ்ந்த முல்லை தவிக்கின்றதே!
தாய் பாசம் தனை வேண்டி துடிக்கின்றதே.!
உள்ளங்கை சோறெடுத்து எனக்கூட்டினாய்!
உயிராற நீர் குடித்து பசியாற்றினாய்.!
நான் பிறந்த நாள் கொண்டு விரதம் கொண்டாய்!
நான் உயரப்படியாகி உதிரம் தந்தாய்.!
ஆராரோ பாட்டு சொன்ன ஆனந்தமே!
யார் யாரோ வந்தாலும் நீயாகுமா.!
தோழ் சுமந்த பிஞ்சு ஒன்று காயானதே!
குளிர் தேசத்தில் நின்று அழுகின்றதே.!
மடிசாய நிமிஷங்கள் எதிர் பார்க்கிறேன்!
அந்த நிமிசங்கள் யுகமாக வழி பார்கிறேன்.!
!
கோகுலன். ஈழம்

கோகுலன். ஈழம்