பிம்பங்களை உடைக்கும் - கே.பாலமுருகன்

Photo by laura adai on Unsplash

“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் - கடவுள்”!
------------------------------------------------!
தாண்டவம் ஆடுகிறான்!!
கடவுளைப் போல பார்க்கிறான்!
திடீரென்று அவன் கைகளில்!
சூலம் தெரிகிறது!!
பிறகு!
ஞானப் பழத்தைத் !
தூக்கிக் கொண்டு !
ஓடுகிறான்!!
ஒருநாள் இரவு!
ரங்கநாதன் போல!
படுத்துக் கொண்டு!
வெறிக்கிறான்!!
அவன் பிம்பம் !
உடையும் சப்தமும்!
மீண்டும் ஒரு பிம்பத்தை!
உருவாக்கும் சப்தமும்!
பயத்தை ஏற்படுத்துகிறது!!
மறுநாள் இரவில்!
அலறிக் கொண்டு!
புரள்கிறான்!!
சாத்தான் நெருங்கிவிட்டதாகக்!
கூறிவிட்டு ஓடுகிறான்!!
கடவுள் !
சிதைந்துவிட்டார்!
இனி நான்!
சாத்தான்!
என்று அலட்சியமாக!
வந்தமர்கிறான்!
மற்றுமொரு இரவில்!!
அவன்!
சிரிப்பொலியைக் கேட்டு!
மிரள்கிறேன்!!
அவன்!
சுருண்டு!
என்மீது !
படுத்துக் கொண்டு!
தாவுகிறான்!!
ஏழாம் அறிவை!
வரமளிப்பதாகக் கூறி!
சிரிக்கிறான்!!
சாத்தான்களின் உலகம்!
மிதப்பவை!!
சாத்தான்களுடன்!
அலைந்து திரிவது!
இன்பம்!!
சாத்தான்கள் உறங்குவது இல்லை!!
சாத்தான்களின் கதவுகள்!
நாளிகையாகிவிட்டதென்று அடைப்பதில்லை!!
சாத்தான்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை!!
சாத்தான்களின் உடலில் !
பட்டோ நகையோ!
அவசியமில்லை!!
நீ சாத்தானோடு!
இருப்பதுதான் உத்தமம்!
என்கிறான்!
அவன்!!
சாத்தானாக மாறி!
விஷ்வரூபங்கள்!
காட்டுகிறான்!!
எல்லாமும்!
களைந்து!
பிம்பத்தை உடைத்து!
மீண்டும் கடவுளாக!
மாறி!
உறங்கிவிடுகிறான்!!
கடவுள்களின்- சாத்தான்களின்!
கதறல்களுக்கு நடுவே!
இந்த!
பிம்பம் உடைக்கும்!
ஓசைகளை!
எழுப்பிக் கொண்டிருப்பது!
நான்தான் என்று!
புரிந்து கொள்வதற்கு!
எனக்கொரு!
பின்நவீனத்துவக் கோளாறு!
அவசியமாகியது!!
களைத்து!
களைத்து!
மீண்டும்!
எல்லாவற்றையும்!
உற்பத்திச் செய்து கொண்டிருக்கிறேன்!!
!
-கே.பாலமுருகன்!
மலேசியா
கே.பாலமுருகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.