நாளின் வசீகரம் குறித்து!
ஒரு உதயம் எழுதித்தரும்!
நட்சான்றை!
விசுவாசிப்பதில்லை மனது.!
போர் ஓய்ந்த!
புலரும் பொழுதிலும்!
நம்பிக்கை இல்லை இன்றில்.!
ஒருவர்!
இறந்தால் என்ன ?!
பிறந்தால் என்ன ?!
குதூகலமற்ற வாழ்வில் ...!
ஒரு பதுங்கு குழியை!
தயார் செய்துகொண்டு!
சட்டென மறையத் தெரிந்ததால்!
ஒரு கடற்கரை நண்டு நாம்.!
அனால் முடிகிறதா ?!
அன்றாடம்!
மேலும் மேலும் ...!
நம்மைச் சட்டத்துக்குள்!
அடைக்கின்றன!
நேரும் கிடையுமாய்!
நம்மில் விழும் கோடுகள்

எஸ்.நளீம்