சீதனம்.. வேதனை
கல்முனையான்
01.!
சீதனம்!
--------------!
ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன!
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு!
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற!
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி!
ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்!
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்!
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை!
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு!
பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்!
ஆறேழு லட்சம் என்றால்....!
சீதனம் கொடுக்கும் , வாங்கும்!
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...!
பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்!
தந்தையை விட!
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற!
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.!
தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது!
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்!
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட!
கொடிய நோய் வரலாம்...!
கரும்புத் தோட்டத்தில் களவிலே!
பிடிபட்டாலும் பரவாயில்லை!
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்!
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...!
பார்த்தாயா சகோதரனே...!
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்!
உன்னை விட வீதியில் செல்லும்!
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும் !
02.!
வேதனை!
----------------!
மனிதனின் சோதனையின் உச்சக்கட்டம்!
அவனுள் தோன்றும் வேதனை.!
அவனையறியாமலே அவனுள்ளே!
ஆட்கொள்ளப்படும் வெகுளித்தனம்!
சற்று நிமிர்ந்தாலும் தலை வலி!
காரணம் ஏதொ ஒரு வேதனை.. மனதளவில்!
என் இரு கண்களும் ஏதோ இழந்த ஏக்கம்!
இல்லை.. அது வேதனையின் தேக்கம்!
என் காதுகள் கூட சரியாக கேட்பதில்லை!
அவற்றின் திசுக்களில் கூட வேதனை போலும்!
ஆமாம்,நேற்று என் காதில் எறும்பு ஒன்று!
ஏதொ கூறியது மறந்துவிட்டது...!
சற்று அண்ணார்ந்து பார்த்தேன்!
வானத்தை அதிலும் ஒரு வேதனை!
புரிந்தது எனக்கு தெளிவாக!
வானில் இன்று நிலவு இல்லை அமாவாசையாம்