நீ கொடுத்த !
இலவச வேட்டி!
என் கனவனுக்கு கையாலாகதவன்!
என்ற பட்டத்தை !
கொடுத்தது!
உன் இலவச தொலைக்காட்சி!
என்னுடைய!
காலத்தையும் வயதையும்!
களவாடிக்கொண்டிருக்கிறது!
நீ போடும் இலவச!
சோறும் முட்டையும்!
என் மகனையும் மகளையும்!
பிச்சைகாரர்களாக்கிவிட்டது!
நீ அடித்த கொல்லைக்கு!
எனக்கு இறுதியாக கிடைத்தது!
இலவச வெள்ளைச் சேலை!
நான் உனக்கு போட்ட!
ஒரு இலவச ஒட்டு!
என் வீட்டை !
இருண்ட வீடாக்கிவிட்டது!
நான் இலவச சிலம்பிற்க்கு!
எங்கே போவேன்?!
இதோ என் கட்டை !
விரலை வெட்டி!
எரிகிறேன்.!
!
-கு.சிதம்பரம், சீனா
கு.சிதம்பரம், சீனா