01.!
முயற்சி!
------------!
குரங்கு பெடலில்!
சைக்கிள் ஒட்டியும்!
முட்டி தேய விழுந்து!
ரத்தம் பார்த்திருக்கிறேன்.!
நீந்த தெரியாமல்!
தண்ணீர் குடித்து!
நீருள் வீசிய அண்ணனை!
ஏசியிருக்கிறேன்..!
தேர்வுக்கு!
முந்தய வாரத்தில்!
தலையணை நனைய!
பயந்து அழுதிருக்கிறேன்..!
பிரச்சனைகள்!
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்!
விக்கித்து நின்றிருக்கிறேன்..!
என்றாலும் கூட!
நான் நீந்துகிறேன்..!
தேர்வுகளை வெல்கிறேன்!
முயற்சி தரும் சுகத்தில்!
லயித்து வாழ்கிறேன்... !
!
02.!
சமத்துவம்!
--------------!
கணவனை இழந்த!
அடுத்த வீட்டு சிவகாமி!
பத்தாம் நாள்!
பூவும் போட்டும் விடுத்து!
திரு நீறு அணிந்தாள்....!
மனைவியை இழந்த!
எதிர் வீட்டு முருகையன்!
மூணாம் மாசம்!
துக்கமெல்லாம் தலை முழுகி!
பட்டு வேட்டி அணிந்தான்!
!
03.!
முன்னேற்றம்!
-----------------!
வேக வேகமாய் போனால் தான்!
முன்னே போக முடியும்....!
முன்னே போன சந்தோஷம்!
மனசுள் இருந்தாலும்!
புற்கள் மிதி பட்ட வருத்தம் மட்டும்!
நெருடலாக நினைவினிலே
மோகன் குமார், சென்னை