கால்சட்டையின்.. இன்றைய சுடுகாடொன்றில்
வித்யாசாகர்
கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!.. இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம் !
!
01.!
கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!
---------------------------------------------------------------!
நாங்கள் பிடித்த மண்வெட்டியும்!
மண்கூடையும்!
சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை,!
சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன;!
சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட!
வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த!
அப்பாவின் சாராயமும் -!
அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது;!
பசித்த வயிறும் செருப்பிடா கால்களும்!
சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை!
தெருவில் போகும் பள்ளிச் சீருடையின் வெண்மையில்!
கருகித் தான் போனது;!
ஏங்கிய மனசும், எட்டிநின்று பார்த்த!
ஆசைப் பார்வையும் ஈரமே காயவில்லை; ஈரத்தின்!
சதுப்பிலும், ஏறி அடுக்கிய செங்கற்களின் இடுக்கிலும்!
வாழ்க்கை வெறுமனே புதைவது வலித்தது; !
படித்து வராத அறிவும், பகுத்தறியக் கல்லா!
கல்வியும் வெறும் தார்சாலையில் தீர்வது தீரட்டும்,!
நாளை மரணித்துப் படுக்கும் பாடைக்கு, பார்ப்பவர்!
'மண்வெட்டியின் பிணமென்று' பெயர்வைப்பர் வைக்கட்டும்;!
தெருவோர தூளியின் ஓட்டையில் வரும் காற்றும்!
எங்கோ தூர இடைவெளியில் கேட்கும் பிள்ளைகளின்!
படிக்கும் சப்தமும், அம்மா சேலையின் வாசமும், அப்பா !
என்றோ வங்கித்தரும் புதிய சட்டையின் பூரிப்பும் போதும் போதும்;!
பெரிய படிப்பு படித்து காதில் ஸ்டெதாஸ்கோப் மாட்ட!
திடீரெனக் கனவெல்லாம் பூக்கவில்லை, அந்த புதிய புத்தகத்தின்!
வாசம் நுகர அன்றிலிருந்தே ஒரு ஆசை, ஆயுதம் பிடித்த கையுதறி!
யாரேனும் புத்தகத்தைத் திணித்தால்; கெட்டியாகப் பிடித்துநடக்க ஆசை;!
ஆசையென்ன ஆசை!
அது தெருவோர சல்லியுடனோ !
தீப்பெட்டியின் குச்சிகளோடோ!
ஊதுபத்தியின் வாசத்திலோ கலந்து மணக்கும் மணக்கட்டும்;!
நாங்கள் படித்தாலென்ன!
எங்களின் கிழிந்த கால்சட்டைகள் ஒட்டித்!
தைக்காவிட்டால்தானென்ன - உங்கள் மனது லேசாகும்!
வேண்டுமெனில் ஒரு உச்சுக் கொட்டிவிட்டு கடந்துப் போங்கள்;!
எங்களுக்கான வாழ்க்கை எப்பொழுதும் போல்!
மண்வெட்டியிலும் மண் கூடையிலும்!
படிக்கக் கிடைக்காத பாடங்களாகவே நிறையும்!
அல்லது உங்கள் தீபாவளியில் பட்டாசாய் நன்கு வெடிக்கும்;!
காலத்திற்கும் ஒரு குறையாய் எங்களுக்குள் மட்டும்!
இது வலிக்கும் வலிக்கட்டுமே; எங்களுக்கு வலித்தாலென்ன - நீங்கள் போய்!
அந்த உழைப்பாளர் சிலையில் ஒன்றிற்கு கால்சட்டையும்!
இன்னொன்றிற்கு குட்டைப் பாவாடையும் மாட்டிவிடுங்கள்,!
அல்லது யாரேனும் சிபாரிசு செய்து - அந்த!
உழைப்பாளி சிலைக்கருகே யிரண்டு!
சிறுவர் சிலைகளையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்;!
நாங்கள் படிக்காத கல்வியை கவிதையாக்க நாளையது உதவலாம்!!!
02.!
இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம் !
-------------------------------------------------------------------!
மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம்!
இன்னும் காய்ந்திடாத மனத்திரையில் !
விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது!
மரணத்தின் பெயர்தான் கொலையில்லை;!
சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில்!
சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில் !
நடக்கின்றன கொலைகள் -!
உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே;!
மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம்!
தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும்!
அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ கண்ணீரோ!
போனது போனபடியே நகர்கிறது காலம்;!
யாருக்கு யாருண்டு!
யாரின் அசைவில் யாருக்கு வலிக்கிறதிங்கே!
யாருமில்லா தனியுலகில் எவர்குறித்து யெண்ணியழ - !
இத்தனை இத்தனைச் சுயநலமோ?!!!!
சோற்றிற்கு சண்டையிட்டு சொத்துக்கு கொலைசெய்து!
பாட்டிற்கு கடல்தாண்டி படத்திற்கு வீடு விற்று!
வேலைக்கு லஞ்சம் கொடுத்து ஏழையின் ரத்தமருந்தி!
காதலுக்கு வீடுவிட்டு கட்டியவளை தெருவில் நிறுத்தி !
ச்சி........... மனிதர்களா நாம்?!
மனிதம் நிரம்பிய -!
உணர்விற்குத் தக வாழ்க்கையையா வாழ்கிறோம்?!
பிறர் நல அக்கறையின்றி பிறப்பவர் யாருமிலர்!
பிறர்நல னெண்ணாதார் இறப்பதில் வருத்தமுமில்லை!
பிறருக்கு ஈயாதான் இருப்பதில் ஏதுமில !
உயிர் அது இழுத்து இழுத்து ஒருவீட்டில் விளக்கெரிய -!
வீடு சுற்றியொரு அடர்ந்த இருட்டுப் படருமெனில் !
விட்டுத் தொலையதை;!
கனக்கும் சுடு காடுதனில் -!
துளிர்க்கட்டும் புதிய மனிதம் உனக்கும் எனக்கும் பிறருக்குமாய்