தேடியதை நாடியதும் - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

சக்தி சக்திதாசன் !
!
தேடியதை நாடியதும் !
தேவைகள் மறைந்ததுவோ !
தோல்விகளின் வலிகள் !
தொலைது£ரம் போனதுவோ !
பயணத்தின் முடிவிலே !
பாதங்கள் தேய்ந்ததும் !
பயணத்தின் நோக்கமே !
பலனற்றுப் போனதுவோ !
வாழ்க்கையெனும் தோட்டத்தில் !
வாடாத மலரென்று !
வளர்த்து வந்த செடியொன்று !
முள் தந்த கதையிதுவோ !
நேற்றுவரை பூஞ்சோலை !
இன்று அது தார்ச்சாலை !
நாளையென்ன பாலைவனமோ !
நலிந்ததந்த இதயமன்றோ !
கண்களற்றோர் உலகினிலே !
கண்ணீருக்கும் மனிதனவன் !
கதிரவனைப் பறிகொடுத்து !
பகலற்ற பலன் பெற்றான் !
இல்லாததை எண்ணியேங்கி !
இருப்பதையே மறந்து விட்டு !
இன்பத்தை ஈடு வைத்து !
இவன் பெற்ற வட்டி துன்பம் !
தேடியதை நாடி நீ ஏன் தானோ !
தேவைகளைத் துறந்து இங்கே !
தியாகங்களின் சாம்பலிலே !
நியாயங்களைத் தேடுகின்றாய் !
அன்புடன் !
சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.