உள்ளம் நினைத்திருந்தது !
முகமறியா முதற்காதலின் முறிவால் !
உறவொன்றின் இணைப்பை ஏற்க !
உள்ளம் மறுத்திருந்தது !
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில் !
விளையாடச்சொன்னது !
இன்னும் பல உணர்வுளால் !
தூசி படிந்து இரண்டு வருடங்களாய் !
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று !
உன்னால் குடிபூரல் !
கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால் !
இம்முறை மௌனமே என் !
முதல் வா£த்தையாகியது !
என் ஆன்மாவின் உணர்வுகள் !
என் விருப்பத்தை உனக்கு !
வெளிப்படுத்தும்வரை உன் !
கள்ளமற்ற உள்ளம் மட்டும் !
என் கண்களுக்குத் தெரியட்டும் !
மௌனமே என் மொழியாக இருக்கட்டும் !
என் உணர்வின் அலைகள் உன்னை !
நெருங்குவதற்குள் நீ என்னிடமிருந்து !
விலகிவிட்டால் என் விருப்பு மௌனமாய் !
என்னுள்ளே சாகட்டும்
கத்துக்குட்டி