அதிகம் - முருகடியான்

Photo by engin akyurt on Unsplash

நாத்திகனாய் இருந்ததனால்!
நானிழந்தத் தமிழதிகம்!!
நாத்திகனாய் இருந்ததனால்!
நானறிந்த அறிவதிகம்!!
நாத்திறத்தார் சொல்,எழுத்தால்!
நடைமயங்கி நானெடுத்த!
பாத்திறத்தை அறியாமல்!
பா,திறம்போ னதேயதிகம்!!
!
காதலெனுந் தேனுணர்வில்!
கடமைமறந் தேனதிகம்!!
சேதமிடும் விலங்குணர்வில்!
சேர்ந்திருந்த நாளதிகம்!!
பேதைகளைப் பேரறிவுப்!
பேழையென்ற நினைப்பதிகம்!!
ஏகமிலாப் பொதுவுணர்வில்!
இருந்ததுதான் மிகஅதிகம்!!
!
எல்லார்க்கும் நன்மைசெய்ய!
எண்ணுகின்ற குணமதிகம்!!
நல்லராய் நினைத்ததனால்!
நானிழந்த பணமதிகம்!!
புள்ளார்க்கும் மனக்காவாய்!
பூத்திருக்கும் கவியதிகம்!!
கள்வடிக்கும் செந்தமிழைக்!
காப்பதிலென் உணர்வதிகம்!!
!
-பாத்தென்றல்.முருகடியான்
முருகடியான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.