அப்பாவனம் - ஷம்மி முத்துவேல்

Photo by FLY:D on Unsplash

இஸ்த்ரி போட்டு !
மொறு மொறுப்பாய்!
மாட்டிய சீருடையில் !
ஆட்டோவில் !
பொம்மையாய்-!
குறும்புத்தனமாய்!
குதித்து விடுவேன் என !
பின்னோடு வந்த நாட்கள் !
ஸ்கூட்டரில் பின்னோக்கி நான் அமர !
அறிவாளி ,!
வித்தியாசமானவள் என !
பெருமிதத்தோடு !
பட்டமளித்த நாட்கள்......!
மரமேறிய கை கால்கள் !
சிரைத்து !
முழங்காலில் தையலிட !
தேம்பிய என்னை !
வீர தழும்பு என !
தட்டி கொடுத்த நாட்கள்....!
பூப்பெய்தி நான் பயந்த போது !
பருவ மாற்றங்களை !
பக்குவமாய் புரிய வைத்த நாட்கள் !
ஷம்மி குட்டி! !
மெல்ல சாதுவாய் !
சொல்கிறாய் இது கடைசி என தெரியாது !
நான் அன்போடு !
விடை கொடுத்த நாள் .....!
படு களம்!
18 நாள் !
பிரிவுக்கு அஸ்திவாரமாய் !
நீயின்றி நான் இருந்த நாட்கள் !
உயிரற்று உனை கிடத்த!
நம்பாமல் உன் முகத்தில் !
எனக்கான புன்னைகையை !
தேடிய நாள்.....!
பல 'முதல்' களை வலிக்காமல் !
கற்று தந்ததலோ !
என்னவோ !
பிரிவின் 'முதல்' லை !
வலிக்க கற்று தருகிறாய் !
நிஜம் கனவாகும் என்ற நம்பிக்கையில் !
13 வயதில் இருந்து காத்து இருக்கிறேன் !
ஒவ்வொரு ஸ்கூட்டர் சத்ததிலும்!
கேட் திறப்பிலும்
ஷம்மி முத்துவேல்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.