முக்குக்கண்ணாடி ...!
வெளியே தெறிக்கும்...!
அந்த காந்த கண்களா?...!
அதன் மேலிருக்கும் ...!
வளர்ந்தும்-வளராத...!
அந்த புருவமா?!
கோபம் பளிசிடும் நாசியா?!
அதன் கிழ் இருக்கும்...!
கற்றை மீசையா?!
கவிதையை நேர்த்தியாய்...!
படிக்கும் உதடுகளா?!
அதன் உள் இருக்கும்...!
சற்றே உடைந்த முன் பல்லா?!
கவர்ந்திழுக்கும்...!
அந்த அழகிய காதா?!
சங்கிலி அலங்கரிக்கும்...!
சங்கு கழுத்தா?!
சற்றே வளைந்திறுக்கும்...!
அந்த ஒற்றை விரல் நகமா?!
பரந்து விரிந்த அந்த மார்பா?!
முதுகில் இருக்கும்...!
அந்த முடிமுளைத்த மச்சமா?!
கேந்தி...!
நடக்கும் அந்த காலா?!
எது ஈர்த்து என்னை தங்களின் !
நிரந்தர கைதி ஆக்கிவிட்டது?!
...........எது?
அனாமிகா பிரித்திமா