விதையாய் விழுந்து எனை!
உன்னில் புதையலாய் இட்டேன்!
விதையதனில் துளிர் தெரிக்க!
உதிரம் உருக்கி உரமாய்!
எந்தனில் உயிர் ஊறினாய்!
திங்கள் பத்து களைய!
நின் வயிற்றுத் தொடிலில்!
எனை ஊஞ்சல் இட்டாய்!
பெண் எனும் போர்வைக்குள்!
சேய் பின்பு தாரமாகி!
என்னுடையத் தாய் ஆனாய்!
உன்னை பற்றி எண்ணியே!
வியப்புற்றேன் என் தாயே!
வினோத்குமார் கோபால்