ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் கண்ட துண்டோ!
கருத்த அறை அதனில்!
தாயவள் உடல் உரிஞ்சி!
செங்காந்தற் மலர் மேலே!
செந்தேன் தடவியது போல்!
தன் உடல் தரித்து!
தானறிந்த அழுகை யெனும்!
நாதம் முழுங்கி உலகிற்கு!
தன் வருகையை யறிவிக்கும்!
இசை நிகழ்வை யுணர்ந்து!
மனமகிழும் தாய் அவளின்!
உணர்வுகளை உணர்ந்த துண்டோ!
ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் கண்ட துண்டோ!
வினோத்குமார் கோபால்