மகுடங்களுக்கு ஆறறிவு - முஹம்மட் மஜிஸ்

Photo by Paweł Czerwiński on Unsplash

நிசப்த்ம் கக்கிய!
இரவுப்பொழுதொன்றில்!
அவனை சந்திக்க நேரிட்டது!
தோல்விகளால் நிரப்பிய இதயத்தோடு!
அவனால் பேசிய வார்த்தைகளை!
நிஜங்களால் முடியாவிட்டாலும்!
கனவுகளால் சிகரம் தொடும்!
என்னால் புரிந்து கொள்வது!
கஸ்டமாகவே இருந்தது !
அவன்!
அத்தி பூப்பதை அவர்களின்!
வரவோடு ஒப்பிட்டான்!
நான்!
புதுமையாக ஏதாவது சொல்லென்றேன்!
அவன்!
அன்று அவர்கள்!
எமக்கு மலர்களை!
மட்டும் காட்டி விட்டு!
எம்மை வேறோடு பிடுங்கிச்சென்ற!
பழய கதையை ஞாபகமூட்டினான்!
நான்!
கடந்தவை திரும்பாதென்று!
அறிவுரை சொன்னேன்!
அவன்!
நாம் அன்று!
சிறகுகள் வாங்க கால்!
நடையாய் போன!
கதையை வெட்கத்தோடு!
விபரித்தான்!
நான்!
அனுபவமெல்லாம் ஒரு பாடமென்று!
போதனை செய்தேன் !
இறுதியில்!
அவன் தன்னுள்ளத்தில்!
நெடு நாள் மறைத்து!
வைத்திருந்த ஒரு காதலை!
சொல்வதப்போல அச் செய்தியை!
சொன்னான்!
அவனுக்கும் அழைப்பு!
வந்திருக்கிறதாம் நாளை!
கொழும்பிலிருந்து தலைவரின்!
போஸ்டர்!
வருகிறதாம்
முஹம்மட் மஜிஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.