அருவிகளின் பயணம்!
ஆறாக முடிவதுடன், !
ஊர்களில் வெளிச்சத்திற்கு!
உத்தரவாதம் தருகிறது. !
ஆறுகளின் பயணம்!
அது போகும் பாதைகளில்!
தீராத தாகத்தைத் தணித்து!
அள்ளித் தருகிறது செழிப்பையும்.!
ஆடைகளின் பயணம்,!
கடைசி வரை மானத்தைக் காப்பதுடன்,!
காட்டிவிடுகிறது !
கவர்ந்திழுக்கும் அழகையும்.!
பூக்களின் பயணம் !
புனிதத்தில் முடிவதுடன்,!
மரியாதைக்கு அடையாளமாகும்!
மகத்துவத்தையும் தருகிறது.!
மரங்களின் பயணமோ!
பலனை எதிர்பார்க்காமல்!
பார்த்துப் பார்த்துக் கடமையைச் செய்யும் !
கீதையின் பாதையில்.!
மனிதனின் பயணம் மட்டும் ஏன்!
மக்கிப் போய்த் தொடர்கிறது.!
மாறாத வடுக்களை!
மற்றவர் மனங்களில் பதிப்பதும்,!
அடுத்தவர் உணர்ச்சிகளை!
அடியோடு மிதிப்பதும்,!
பார்க்காத போது வக்கிரத்தைப் !
போர்த்திக் கொள்வதும்!
வஞ்சனையை மனத்தில் வைத்துக் கொண்டு!
நஞ்சினைச் செயல்களில் ஏற்றுவதுமாய்!
வழித் தடங்களில் எத்தனை!
வாழ்க்கைத் தடங்கல்கள்.!
பாழடைந்து விட்ட இந்தப்!
பாதையைச் செப்பனிட்டுப்!
பயணத்தின் மீதியைப் !
பரவசமாக்குவோம். !
-சித. அருணாசலம்