சிலேடை வெண்பாக்கள்!- (II)!
----------------------------------!
பானையும், பலகாரமும்!!
தட்டித் தழலிடலால் ஆவென்னும் வாயுளதால்!
சுட்டிடப்பொன் வண்ணமாய் தோன்றுதலால் -அட்டியின்றி!
மண்பானை வாசப் பலகாரம் நேராக்கிப்!
பண்பாய் தமிழில் படி!!
பனியாரமும், புத்தகமும்!!
புரட்டுதலால் பல்சுவை காணுதலால் போய்ஓர்!
திறண்டநூல கத்துள் சேர்ந்தும் -இருத்தலால்!
உண்ணும் பனியாரம் புத்தகத்தை ஒக்குமெனப்!
பண்பாய் தமிழில் படி!!
விண்ணும், கிணறும்!!
சந்திர சூரியர் தோன்றுதலால்@ தண்ணீரைத்!
தந்தேநம் தாகம் தணித்தலால் -சிந்தித்தே!
விண்ணும்நீர் ஊற்றுக் கிணறும்நேர் என்றாய்ந்தே!
பண்பாய் தமிழில் படி!!
-அகரம்.அமுதா
அகரம் அமுதா