01.!
வெறுங்கை!
-----------------!
எழுதி அழு!
அழுது எழு!
எதாவது செய்!!
உள்ளங்கையில்!
ஒன்றுமில்லாதது!
உன்னோடு எனக்கும்!
மட்டுமேனும்!
தெரிந்ததாய்ப் போகட்டும்..!
திரும்பிய கவிதைகளைத்!
திருத்தாது!
தினம் இரவல் தரும்!
புத்தகத்திற்குள் பத்திரமாய் வை!
உன் முறையில்!
ஒருமுறையேனும்!
அவர்கள் காட்டியதையே!
சற்று உயர்த்திக் காட்டியிரு..!
ஆள் காட்டியவர்களுக்கு!
அதற்கடுத்த விரல்!
காட்டியவர்களுக்கும்!
அப்படியே!!
2.!
படைப்பு!
---------------!
சட்டைப்பையுள் மழை.. நேற்றிரவு பெய்தொழிந்த!
மழையானது!
சன்னல் கம்பிகளின்!
நீள அகலம் பொருந்தப்!
பளிச்செனப்!
பதிந்திருந்ததென் செல்பேசிக்குள்..!
தரை தொடும் முன்பான!
அந்தரத் துளிகளைத்!
திரையில் வெகுநேரம்!
பார்த்திருந்து மீண்டு!
சலனமின்றிச் சொன்னது குழந்தை!
நேற்றே நனைந்துவிட்டதாய்..!
அவ்விரவில் எழுதிய!
கவிதையொன்று..!
சட்டைப்பையுள்!
நான்காய் மடிக்கப்பட்ட காகிதத்தில்!
செத்துப் போயிருந்தது!
இந்நேரத்தில்
கார்த்தி.என்