இருப்பும் இறப்பும் - காருண்யன்

Photo by Didssph on Unsplash

அந்த மரம் வெகு அமைதியாக !
நெடுங்காலமங்கே நின்றுகொண்டிருந்தது !
தளிர்த்தும் துளிர்த்தும் ஓங்கிய வளர்ந்து !
கனிந்து நின்றது !
பின்னர் யார்யாருக்கோ குறிவைத்த !
குண்டுகள் ஷெல்கள் அதன் !
உடலைத்துளைக்கத் தொடங்கின !
தினமும் காயம் பல பட்டு !
வலி சுமந்தாயினும் உயிர் !
பிழைத்து நின்றது அம்மாமரம் !
பின்னர் வாழ்வு என்பது தினமும் !
காயம் கண்டல் நோவு !
குருதி குமுறல் என்றாச்சு !
பழைய ரணங்கள் ஆறமுன்னே !
மீண்டும் புதிய புதிய ரணங்கள் !
தலைமைக் கிளையும் !
சிறுகிளைகளும் மடிந்து கருகி !
பட்டுப்போக மூலவேரில் !
கொஞ்சம் உயிரைத்தாங்கி !
நொந்து முனகிக் கொண்டே !
கோமாவில் வாழ்ந்தது பலகாலம் !
பின்னர் ஒருநாள் காலை !
அதன் மரணம் அறிவிக்கப்பட்டது !
அதன் உறவுகள் பல கோடி !
அம் மாமரத்தின் பெயர் !
மனிதம். !
30.10.2000
காருண்யன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.