கருவறை உறவு - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by Tengyart on Unsplash

காற்றின் ஈரம் மீட்டெடுக்கிறது !
நினைவின் சுகந்தங்களை. !
ஒன்றை இழந்தால் தான் !
ஒன்றைப் பெற முடியுமா? !
தாயின் கதகதப்பான ஸ்பரிசம் !
கண்ணீரை வரவழைக்கிறது. !
உன் மடியில் தலை சாய்க்கும் !
மறுவாய்ப்புக் கிட்டாமலே !
போய் விடுமோ என !
மனம் பதைபதைக்கிறது. !
என் நெஞ்சத் துடிப்பின் அதிர்வு !
உனக்குத் தெரிந்திருக்கும். !
நம் மனங்களிடையே !
அழுத்தமாய் இருக்கும் இந்தச் சுவரை !
யார் தகர்ப்பது? !
தொலைவுகளைக் கடந்தும் !
எல்லைகள் தாண்டியும் !
எனக்குள் நீயும் !
உனக்குள் நானுமாய் !
காலம் மறந்து உறைந்திருக்கிறோம்
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.