01.!
என் அன்புக் காதலா...!
--------------------------!
பாலோளி வீசி!
முழுமதி உலா வர!
அவ்வோளியை பிரதிபலித்து!
அந்தி மல்லிகள்!
மணம் வீச!
சில்லேனத் தென்றல்!
மர இலைகளில்!
இசை மீட்ட!
வெண்மதி தன் முகம்!
பார்க்க தோதாக!
சலனமின்றி ஒடிய!
நிரோடையில்!
ஆங்காங்கே துள்ளி!
குதித்த மீன்களுமாக!
இயற்கை அழகேல்லாம்!
கொட்டி கிடந்த!
அந்த இரவையும்!
ரசிக்காது!
வாடி நின்றேன்!
அழகா உன் வருகைக்காக!
நீ இல்லா இடத்தில்!
அமுதமும் கசகின்ற போது!
இவையேல்லாம் எம்மாத்திறம்....!
!
02.!
முதியோர்!
--------------- !
கடந்து வந்த!
நாட்களை!
காலம் முகத்தில்!
அச்சிடக்!
காணவேண்டியவை எல்லாம்!
தேடித்தேடிக் கண்ட!
களைப்பில் பார்வை குன்ற!
ஒடியோடி உழைத்து!
உடலும் சோர்வு!
அடைய!
கம்பீரமாக எதிர்நோக்கிய!
வாழ்கையை எண்ணங்கள்!
அசைபோட!
கால மாற்றங்களுக்கு!
சாட்சியாய்!
காலம் கற்றுத்தந்த!
பாடங்களுக்கு பதிவேடாய்!
நம் அனைவரின் இல்லங்களிலும்!
ஓரமாய் தள்ளாடும்!
அனுபவ அந்தாதி!
படிக்கப்படாமலே

பிரதீபா,புதுச்சேரி