எப்பொழுதாவது கவிதைகள்!
சிறகுகள் தரிப்பதுண்டு.!
கால்கள் முளைத்துக்!
கண்டதுண்டா நீங்கள்..?!!
நான் கண்டேன்...!
கால்கள் முளைத்த!
என் கவிதையை.!
எழுதி முடித்து!
சிறிது காலத்தில்!
எழுந்து நடந்தது.!
வீடு முழுக்க!
வேகவேகமாய்ச்!
சுற்றிவந்தது.!
அடுக்களைக்குள்!
அடிக்கடி நுளைந்தது.!
தட்டு முட்டுக்கள்!
தரையில் சிதறின.!
சாப்பிடும் வேளைகளில்!
எல்லோர் உணவையுமது!
எச்சிற்படுத்திற்று.!
கணினியிலும் அது!
கைவரிசை காட்டியது.!
இதுவரை காணாததெல்லாம்!
திரையில் தோன்றின.!
என் எழுதுமேசையின்!
விரிப்பை அது!
இழுத்தெறிந்தது.!
உடைந்த மைப்போத்தலால்!
உடல் முழுக்கக்!
கோலம் போட்டது.!
கை கால்களை உதறி!
கத்திப் புரண்டது.!
என் எச்சரிக்கைகள்!
எடுபடவில்லை.!
அதட்டல், மிரட்டல்களுக்கது!
அசைந்து கொடுக்கவில்லை.!
கடைசியாக அது!
களைத்துப்போனது.!
மடிமீது வந்தமர்ந்து!
கண்ணயர்ந்த்து.!
என்ன செய்வது...?!!
இல்லறத்தில் இருவர்!
இணைந்தெழுதும் கவிதைகள்!
இப்படித்தான்.!
எப்போதுமே நமை!
செல்லமாக!
சினப்படுத்தும்
மன்னார் எம். ஷிபான்