நான் கூற நீ கேட்க - சத்தி சக்திதாசன்

Photo by Tengyart on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
நிமிடத்தின் ஒர் பாகத்தை எனக்குத்தா !
என்மனவுறையை சிறிது அகற்றுகின்றேன் உன் !
செவிகளைத் திறப்பாயா ? !
உள்மனத்தின் அசுத்தங்களை கழுவும்போது அது !
உன்வீட்டுக் கால்வாய் வழியாக ஒடுகின்றது !
என் பயணப்பாதையில் சிறிது ஓய்வெடுக்க நான் !
எண்ணிய போதுன் இதயத்தைக் கடந்து !
கொண்டிருக்கின்றேன். !
மைல் கணக்காய் நடந்து விட்டேன் இன்னமும் !
அரைவாசிப் பயணம் கூட முடியவில்லையே !
முட்புதர்கள் முடிந்துவிடும் !
என எனக்கு ஏன் பொய்யுரைத்தாய் ? !
நான் நடக்கும் பாதைக்குப் பெயரே நெருஞ்சிப் பாதையாம். !
ஓடக்கூடாதென உட்கார்ந்தபடியே உத்தரவிட்டு விட்டான். !
சிந்தனைச் சுமைகளை நானிறக்கி வைக்க !
சிலைபோலமர்ந்து நீ கேட்டிருக்க !
உன்னிதயம் கனக்கின்றதே ஏனது ? !
சமுதாயாத்தின் அவலட்சணங்களை அகற்றிட !
அழுத்தமாய் போராட உன் துணை வேண்டும் !
மக்களின் மனங்களை பிணைத்திருக்கும் !
மாயை எனும் அந்தச் சங்கிலியை !
அறுத்தெறிவோம் என்னுடனே !
கூட வருவாயா ? !
விஞ்ஞானத்தை மறுக்கும் !
வீணர்கள் கூட்டத்தை !
வீழ்த்த ஓர் யுத்தம் தேவை !
விரைந்து நீ வாராயோ? !
ஆன்மீகம் எனும் அற்புத உணர்வு !
ஆண்டவன் எனும் அழியா ஞானம் !
அடிப்படையையே அழித்துவிட்டு சில தீயர் !
அறிவை மறுக்குமொரு அநியாத்தை !
அழிக்கவுன் துணை தேவை. !
பயணம் முடிந்தது பாதிதான் மீதி ஏக நின் தோள்வலிமை தேவை !
சிறிதுநேரம் என் விழிகளை மூடிக் கொள்கின்றேன் !
கனவெனும் தேரேறி களைவேன் அறியாமையை !
தோழனே ! !
தூக்கத்தைக் கலைக்காதே ஏனென்றால் !
ஏக்கம் விற்பனையாகா சந்தையது !
என்பேனா கக்குவது மையல்ல என்னிதய ரத்தமே ! !
முன்னேற்றங்கள் எல்லாம் க்ஷவ்வுலகில் !
மூலையில் !
முடங்கிக் கிடக்கின்றனவே !
நியாயங்களை ஏன் மூட்டையாக் கட்டி !
நிறுத்து நிறுத்து !
நீசருக்கு விற்கின்றாய் ? !
தடையெனும் தளயறுக்க கொண்ட கத்திரியில் !
நான் ஒருபாதி தான் !
மறுபாதி நீயும் நான்போகும் திசையில் அசையாவிட்டால் !
தவறாமல் தடைகள் தங்கியேவிடும் !
உன்னிதயத்தின் முன்னே நடந்து கொண்டிருக்கின்றேன் !
போகும் ஊருக்கு நீயும் சேர்ந்து நடக்காவிட்டால் !
விடிவுகள் விளக்கமற்றுப்போய்விடும் !
வெற்றிகள் !
வெறுமையாய்ப் போய்விடும் !
சிலர் மட்டும் வாழும் உலகில் !
பலர் ஏக்கம் தீரும் வகையில் !
நான் கூற !
நீ கேட்டு !
சேர்ந்து படைக்கும் ஓர் புதுவுலகில் !
ஆண்டவன் பெயரால் !
அபிஷேகம் மட்டுமின்றி !
அறிவையும் ஆக்கி வைப்போம் !
நேரம் நெருங்குது வா நாம் பயணத்தை தொடர்வோம்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.