வந்தாள் தமிழ்மகள் தந்தாள் - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

சக்தி சக்திதாசன் !
சிற்றாடை கட்டி சித்திரத் தமிழ்ப்பாவையள் !
சித்தம் தனை நிறைத்து யென் சிந்தை நிறைந்தாள் !
முத்தாரம் பூட்டி முழுமதி தரைமீது வந்தது போல் !
முப்பாலும் நான் கற்க முத்தமிழால் முடிச்சிட்டாள் !
வித்தாரம் கற்றதும் விந்தை பல புரிந்ததும் !
வித்தகி செந்தமிழ்ப்பெண் வித்தை தானென்பேன் !
சொற்பாரம் கொண்டு நல் கவிதை பல புனைவதும் !
சொந்தமாய் அவள் மொழியழகு கண்டதினால் !
நிற்பாரம் தாங்கிடும் இப்பூமிப் பாவையைப் போல !
நித்திலங்குமரி தமிழ் எனைப் பொறுமையுடன் வளர்த்திட்டாள் !
தொலைதூரம் வாழ்ந்தும் நெஞ்சில் தமிழன்பு நிலைப்பது !
தோகை தமிழ்த்தோகையவள் அருளன்றி வேறில்லை
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.