பெண்களுக்கோர் தினம் - சத்தி சக்திதாசன்

Photo by engin akyurt on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
பெண்களைக் கொண்டாடுவோம் !
பெண்களின் தினத்தை நன்றாடுவோம் !
முன்பொரு பாரதி எடுதியம்பினான் !
முத்தமிழ் துணைகொண்டு கவி பாடினான் !
நவீன உலகத்தின் நாயகிகள் !
நாளைய முன்னேற்ற சாரதிகள் !
பேதைகள் என்றொரு சொல் அழிப்போம் !
பெண்களின் பெருமைகள் பகன்றிடுவோம் !
அர்த்தநாராசுவரர் அழகினை அறிந்திடுவோம் !
ஆண்டவன் விளக்கிய தத்துவம் உரைப்போம் !
சீதனம் என்றொரு சொல் இயம்பிடுவர் இல்லை !
சீதைகள் இப்போ திக்குளிப்பதுமில்லை !
ஏற்றம் கொண்ட சமுதாயம் காண விழைவோம் !
எமது மனங்களில் சமத்துவம் காண்போம் !
உழைப்பதில் எவர்க்கும் பெண்காள் சளைத்தவரல்ல!
உண்மை இதுவென உரைத்திடுவோம் !
வருடம் ஒருநாள் வரும் தினமல்ல !
வாழும் தினங்கள் அனைத்தும் பெண்களுக்கே
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.