சக்தி சக்திதாசன்!
கையளவு மண்ணெடுத்து!
கலந்து கொஞ்சம் நீருற்றி!
பிசைந்தெடுத்த களிமண்ணில்!
பிடித்து வைத்த மனிதபொம்மைகள்!
நினைவுகளை விற்று விட்டு!
நீதிதனை விட்டு விட்டு!
நெஞ்சம் நிறைய அள்ளி!
வஞ்சம் கொண்ட பூமியிது!
கனிவு கொண்ட உள்ளங்களைக்!
காயப்படுத்தி பார்க்க எண்ணி!
கயமை எனும் சாயம் பூசி!
கலந்துறவாடும் சொந்தங்கள்!
தர்மம் என்னும் எடைதனை!
தாராசு எனும் இதயத்தில்!
நிறுத்துப் பார்த்து வாழ்ந்திடும்!
நியாயமான உள்ளங்கள் பல!
நிம்மதி என்னும் அமைதியை!
நிழலினுள் தொலைத்திட்டு!
நிஜம் கொடுத்த வேதனையால்!
நீராக கண்களால் உகுக்கின்றார்!
போனால் போகட்டும் போடா!
பூமியே பாவிகள் இராஜ்ஜியம்!
பாவியர் உறவுகள் இனியும்!
பாதிக்க வேண்டாம் எமையே!
இவ்வளவுதான் உலகம் மனிதா!
இவ்வளவேதான் உலகம் என!
இதயத்தை ஆற்றிக் கொஞ்சம்!
இமைகளை இன்றாவது மூடிவிடு
சத்தி சக்திதாசன்