நெஞ்சத்தில் நிகழ்ந்த மாற்றம்!
-- சக்தி சக்திதாசன்!
!
என்!
நெஞ்சத்தில் நிகழ்ந்த மாற்றம்!
உன்!
எண்ணத்தால் விளைந்த ஏக்கம்!
விண்!
மேகத்தில் உலவும் உணர்வு!
கண்!
பார்வைகள் கலக்கும் பொழுது!
ஊண்!
உறக்கமும் மறந்த நிலமை!
வீண்!
பொழுதுகள் நீயில்லா வேளை!
தூண்!
போன்றதென் இதயம் கண்ணே!
நாண்!
போல நீ வளைத்தாய் பார்த்ததும்!
ஏன்!
கண்களின் வழியாய் நீயும்!
தன்!
விழிகளைத் தூது விட்டாய்!
புண்!
ஆகியதென் நெஞ்சம் பெண்ணே!
தேன்!
கலந்ததுதான் காதலின் சுவையே!
நான்!
என்றொரு நிலையினில் மாற்றம்!
நாம்!
என்றதும் தான் இனித் தூக்கம்
சத்தி சக்திதாசன்