ஏனழுதாய் ? என் மகனே !
ஏனழுதாய் ? !
தீய இவ்வுலகத்திலே !
தோய்ந்து போன உள்ளத்துடன் !
காய்ந்து நானும் அழுததாலோ !
நீயழுதாய் ? !
நேற்றைய உலகத்தின் !
நாயகனாய் !
நாளைய உலகத்தின் !
விடிவுக்காய் !
உழைத்துத் தன் !
உயிரை விட்ட உன் தந்தையை !
உணர்வுகளில் தழுவி நான் !
உகுக்கின்ற கண்ணீரைக் கண்டோ !
நீயழுதாய் ? !
ஒரு வாய் சோற்றுக்காய் !
ஓராயிரம் பாதங்களில் !
தலைவைத்து மன்றாடும் இந்தத் !
தாயின் நிலை கண்டோ !
சேய் !
நீயழுதாய் ? !
நன்றாக வாழ்ந்தவர் தான் !
நயவஞ்சகர் சூழ்ச்சியினால் !
நடுத்தெருவில் இன்று !
நின்றாடிடும் காட்சி !
நேற்றுப் பூத்த ரோஜா உன் !
நெஞ்சினிலே நிகழ்வாய்த் தெரிவதாலோ !
நீயழுதாய் ? !
பூமாலை வாங்கவே பாவம் !
பூவையவள் கையில் பணமில்லா நிலையில் !
பூசாரி அர்ச்சனையில் அள்ளியெறிந்த !
பூக்கள் கொண்டு தொடுத்த !
வாசமிக்க மலர்மாலை கூந்தலில் சூடி !
வாராத எதிர்காலம் தனை !
வாசலில் நின்றே பார்த்து !
விழிகள் பூத்து !
ஏங்கும் உந்தன் சக உதிரி !
ஏக்கம் கண்டதாலோ !
என் மகனே !
நீயழுதாய் !
ஊரெல்லாம் கொண்டாட்டம் !
உன் வீட்டில் திண்டாட்டம் !
உழைத்தும் வாழ்வு காணா !
உள்ளங்கள் தான் நம் சொந்தம் !
உன் துயர் துடைக்க வழியின்றி !
உள்ளம் நோக வருந்தும் அன்னையின் !
உடைந்த உள்ளம் கண்டோ !
நியழுதாய் !
கண்ணுறங்கு என் மைந்தா !
காலம் மாறும் என்றொரு !
கனவு நெஞ்சினிலே ஏனோ !
கனிந்து நிழலாடுது !
கைகள் ஒன்றையே நம்பி வாழும் !
காலத்தின் தோழர் ஏழையர் நாம் !
கண்மூட வேண்டுமென்றால் !
கண்ணே கனவுகளை நம்பித்தான் !
கட்டாயம் வாழ வேண்டும் !
-- சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்