வானவில்லின் வர்ணங்களே!
வாழ்வில் வந்த சொந்தங்கள்!
மழைநீரின் தூய்மையெலாம்!
மண்ணின் மீது விழும்வரையே!
நேற்று வாழ்வின் இன்பங்கள்!
இன்று வாழ்வின் ஏக்கங்கள்!
நாளை வாழ்வின் நோக்கங்கள்!
நாளும் தோன்றும் கானல்நீர்!
உண்மை நெஞ்சில் கசந்திடும்!
உறவுகள் அதனை ரசித்திடும்!
அன்பு நெஞ்சில் ஊறுவதற்கு!
அவசியமில்லை அறிமுகம்!
நீரில் போடும் கோலங்கள்!
நிச்சயம் என்றே எண்ணிடும்!
நிஜத்தின் நிழலில் வாட்டிடும்!
நிதர்சனங்கள் வாழ்விலே!
என்றோ நடந்த நினவுகள்!
எப்படி ஆயின கனவுகளாய் ?!
எதையும் மாற்றிடும் காலமோ!
எம்முள் புதைந்த சூட்சுமம் ?!
தொப்புள் கொடியில் பிறந்திடும்!
தானாய் வந்திட்ட சொந்தங்கள்!
தீரா வலியைத் தந்துமே ஏனோ!
தேடல் இன்னும் தீரவில்லை!
உள்ளத்தில் நல்ல உள்ளம்!
உறங்காதென்றான் கவியரசன்!
உண்மைகள் இதயத்தில் உரசும்!
உணர்வுகள் ஒத்தடம் கொடுக்கும்!
வாழ்க்கை என்னும் நாடகத்தில்!
வரித்துக் கொண்டோம் வேஷத்தை!
வாழ்ந்து மடியும் காலம் வரை!
வாழ்ந்து பார்ப்போம் மனிதராய்!
!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்