என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?!
----------------------------------------------!
கேள்விகளை நான் கேட்பேன்!
அது என் கடமை!
பதில்களைத் தருவது!
உன் திறமை.!
பத்துநாளாய்ப் பட்டினி!
பாடிக் கொண்டே கையை நீட்டும்!
பாலகன் அவனையும் இறைவா!
பசியுடன் படைத்தது நீயா ?!
நோயினில் தவித்திடும் அத்தாய்!
பாயினில் உறங்கிடும் அவள் பதி!
கோலங்கள் பலவாய் மாற்றிக்!
கொடுத்ததும் நீயா சொல் ?!
பொழுது போக்க பள்ளிக்கு!
போகும் சில செல்வச் சிறார்!
பள்ளிவாசலில் கண்ணீரொடு!
பார்த்து நிற்கும் சின்னஞ் சிறுவன்!
பாரதன் ராஜ்ஜியத் தலைவனும் நீயா ?!
கண் மூடும் போதும், விழிக்கும் போதும்!
கடவுள் உன்னை கண்பதே பணியென!
கடமை தன்னை கடவுளாய்ப் புரியும்!
கர்மவீரன் கண்களில் கண்ணீர்!
காலத்தின் கோலத்தை வரைவது நீயா ?!
பெண்களாய்ப் பிறந்த காரணத்தால்!
பொன் கேட்கும் உலகின் பேராசையால்!
வாழ்வின்றித் தவிக்கும் கன்னியரின்!
வதைப்பைப் போக்கும் வகையில்லா!
வாழ்வை வகுத்த வள்ளலும் நீயோ ?!
உழைத்து, உழைத்து தம்முடலை!
உருக்குலைத்த மக்கள் வாழ்வினில்!
உயர்ச்சி என்பதே இல்லா நிலமை!
உனது உலகம் இதுவோ சொல் ?!
நீயில்லை என்பார் வரிசையில்!
நானில்லை என்று அறிவாய் இறைவா!
ஏனில்லை உலகில் நியாயம் என்றே!
ஏக்கம் நெஞ்சில் தோன்றுது அத்னால்!
எழுந்தன கேள்விகள் பதிலென்ன சொல்?!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்