உள்ளத்தைக் கேள் - அது!
உள்ளதைச் சொல்லும்!
எண்ணத்தின் சாரங்கள்!
ஏக்கத்தின் பிறப்புக்கள்!
ஏழ்மையின் இலக்கணம்!
எதிர்பார்ப்பின் எடுத்துக்காட்டு!
மனதினில் கருவாகி!
மிதந்தது உருவாகி!
அருகினில் நெருங்கிடவே!
அறிந்ததோ கானல் நீர்!
ஆமாம் ... தயங்காதே ...!
உள்ளத்தைக் கேள் .... அது!
உள்ளதைச் சொல்லும்!
வண்ணமுடைத்த கனவுகள்!
வானுலாவும் நினைவுகள்!
காண்பதற்கும் நினைப்பதற்கும்!
கடைசிவரை போராட்டம்!
முரசறையும் முழக்கங்கள்!
மூச்சுவிடா முயற்சிகள்!
வெற்று வேட்டு வாடிக்கை!
வாழ்வெல்லாம் வேடிக்கை!
கொள்கைகள் காகிதத்தில்!
கொண்டாட்டம் அவர் வியர்வைதனில்!
அனவரின் உடல்களிலும்!
ஓடுவது செந்நீரே!
யார் யாரோ வந்தார்கள்!
ஏதேதோ சொன்னார்கள்!
காற்றடித்த திசைவழியே!
காணாமல் போனதம்மா!
முடியாமல் பிதற்றுகிறேன்!
முடிவென்ன கதறுகிறேன்!
மூடியிருப்பது விழிகள் மட்டுமல்ல!
மூடர்களின் இதயங்களும் தான்!
உள்ளத்தைக் கேள் - அது!
உள்ளதைச் சொல்லும்

சத்தி சக்திதாசன்