சக்தி சக்திதாசன்!
ஏய் பெண்ணே !!
காதலர் தினமாமே ... என்ன!
கண்களை மூடுகின்றாய் ?!
காதல் நெஞ்சத்தை வெறும்!
காசுக்கு விற்றவள்!
காண்பாயா உண்மைக் காதல் நெஞ்சின்!
காயத்தை ஊனக் கண்களால் ....!
பாதையால்!
பயணம் போனவனைப்!
பாய்ந்து ... பாய்ந்து!
பார்வையால் தாக்கிப் பின்!
பொசுக்கித் தூக்கி!
வீசியெறிந்தவளே.. எப்படி அறிவாயடி?!
காதலர் தினத்தின்!
கண்ணியத்தை நீ .....!
ஊமைராகத்தில் உள்ளத்தில்!
உணர்ச்சி கூட்டியொரு கானம் இசைத்து!
உன்னிதயத்தில்!
உட்கார்ந்திருந்தவனை!
உதைத்ததும் பின் வதைத்ததும்!
உனைப்போன்ற வஞ்சிகளின் வழக்கமாகலாம்!
உலகத்தின் மூலையிலே!
உனக்காகத் தன்னை இருட்டினில் புதைத்தவன்....!
உணர்வாயா அவன் வலியை ......!
காதலர் தினமாமே.....!
காகிதப் பூவே!
காண்பதெப்படி வாசத்தை உன்னிடம் ?!
கடந்து விட்டது காலமென்றாலும்!
காளையரை வாழ விட இன்றாவது!
சங்கற்பம் பூண்டு விடு
சத்தி சக்திதாசன்