பச்சைப் பசேலெனும்!
பசும் புற்தரையினில்!
பொன்னொளி பூத்தது!
போலொரு பனித்துளி!
மின்னுது நுனியில்!
உள்ளத்தின் விசாலம்!
உருவத்தில் இல்லை!
உண்மை அதனை!
உணர்த்திடும் பனித்துளி!
சின்னஞ்சிறிய பனித்துளியினுள்!
அழகாய்த் தெரியுது!
ஆலமரத்தின் அழகிய வடிவம்!
அறியும் உள்ளம் வாழ்வின் உண்மை!
இயற்கையின் வனைப்பில்!
இத்தனை படிப்பினை!
இருப்பதை அறியாமல்!
இறுமாப்புக் கொள்வது சரியோ!
இதயம் விரித்து அன்பைப்!
பொழிந்து இன்பம் காண!
செல்வம் வேண்டாம்!
இளகிய மனமே போதும்
சத்தி சக்திதாசன்