கனவுதானா ...?!
-- சக்தி சக்திதாசன்!
!
பசி ....!
என்றொரு சொல்லை!
எங்கோ கேட்டதும்!
அகராதியைப் புரட்டும்!
அற்புதமான உலகம் ......!
கண்ணீர் .......!
காணாத உணர்வதனைக்!
கற்பனையில் காண!
காத்திருக்கும் புதிய!
கண்ணான சமுதாயம் ......!
ஏழை......!
பழங்கால செய்தித்தாளில்!
படித்த செய்தியொன்றில்!
பார்த்த சொல்லதன்!
புரியாத அர்த்தத்தைப்!
புரிந்து கொள்ள!
புதிதாக ஆராய்ச்சி ....!
வரதட்சணை .....!
பணம் தன்னை மறந்துவிட்டு!
குணம் பார்த்துத் தங்கள்!
மணவாழ்வை அமைக்கும்!
மதிநிறைந்து சிறக்கும்!
இளஞ்சிங்கங்கள் .......!
அரசியல்.....!
மகளின் வாழ்க்கையில்!
அரிசி இல்லை என்னும் நிலை!
அற்ற நிலை காண்பதொன்றே!
அரசியலாய்க் கொண்ட!
மனிதத்துவம் கொண்ட தலைவர்கள்....!
சேவல் கூவியது...!
அலாரம் அடித்தது!
அலறிக் கொண்டெழுந்தேன்!
அத்தனையும் ....!
கனவுதானா .... ?!
அன்புடன்!
சக்தி
சத்தி சக்திதாசன்