வாழ்த்துவோம் - சத்தி சக்திதாசன்

Photo by Gary Yost on Unsplash

சத்தி சக்திதாசன் !
தன்னைத்தானே அறிந்த நேர்மை உள்ளங்கள் !
தனக்குத்தானே உண்மையான நெஞ்சங்கள் !
துணையாய் நடக்கும் நட்பின் சொந்தங்கள் !
தூங்காதிருக்கும் இரத்தச் சொந்தங்கள் !
வாழ்த்துவோம் !
துணிவுடன் ஏழ்மையை எதிர்க்கும் இதயங்கள் !
முட்களை வெட்டி பாதையமைக்கும் கரங்கள் !
தன்னைக் கொடுத்துத் தாயைக் காக்கும் தனயர்கள் !
துவளும் கால்களைத் தாங்கும் கொள்கைகள் !
வாழ்த்துவோம் !
வேண்டும் பொருட்களை வேண்டா ஞானங்கள் !
தாண்டும் இன்பங்களை பகிரும் மனிதர்கள் !
மீண்டும் மீண்டும் உதவும் உள்ளங்கள் !
சீண்டும் போதும் பொறுக்கும் அறிவுகள் !
வாழ்த்துவோம் !
நாளைய உலகை மறக்கும் தௌ¤வுகள் !
இன்றைய உலகில் சிரிக்கும் அதரங்கள் !
நாளைய உலகை திறக்கும் சாவிகள் !
எதிர்காலத்தின் மழலைச் செல்வங்கள் !
வாழ்த்துவோம்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.