கனவுகளைத் தொலைத்தவள் - சத்தி சக்திதாசன்

Photo by Jr Korpa on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
கண்ணீரில் !
கரைந்ததினால் தொலைந்ததுவோ !
அவள் கனவுகள் ? !
காதலினை !
காயாகப் பார்த்திருந்து !
கனிந்து வரும் வேளையில் !
காசாக்க முனைந்த !
கயவனின் !
கல்மனத்தால் பாவம் அவள் தூக்கங்கள் !
கனவுகளற்ற பாலைவனமானதுவோ ? !
கன்னியாய்ப் பிறந்ததினால் !
கடைசிவரை சுமையாக !
கற்றோரும் !
கருதும் ஒரு சமூகத்தில் !
கயல்விழியாள் தொலைத்தாளோ !
கனவுகளைக் !
கவலை எனும் !
கானகத்தே ! !
காத்திருந்து !
காத்திருந்து !
கருவிழிகள் பூத்திருந்து !
கன்னிமகள் வாழ்வதனைக் !
காணாத !
காரணத்தால் !
கடலினுள்ளே நீர்த்துளிகளாய் !
கலைந்தனவோ அவள் !
கனவுகள் ! !
கண்களிலே கண்ட !
காட்சிகளைக் கோர்த்தெடுத்து !
காவியமாய் நெஞ்சினிலே !
கற்பனையால் யாத்தெடுத்து !
காலமெல்லாம் பார்த்திருந்த !
களிப்புமிகு வாழ்க்கையதும் !
கைமீறிப் போனதினால் தான் !
கற்சிலைபோல அழகுடைத்த !
கன்னியவள் கனவுகளும் !
காணமல் போயினவோ ? !
கண்டோரை வியக்க வைக்கும் !
கன்னியழகு கொண்டவள்தான் !
கல்வியிலே தேர்ச்சி பெற்ற !
கலைமகள் தான் !
கணத்திலே மயக்கிவிடும் பண்பதனைக் !
கற்றவள் தான் !
கனவுகளை இன்றவள் தொலைத்திட !
காரணமென்ன ? !
காளயவன் மனதினிலே பேராசை !
களியாட்டம் போடுவதால்; சீதனம் எனும் !
கொடுமைதனை எதிர்க்கத் திரணியற்ற !
கருத்துக் குருடர் நிறைந்த !
கல்தோன்றி , மண்தோன்றாக காலத்து சமுதாயம் !
கனவுகளைத் தொலைத்தவளின் !
கண்ணீரைத் துடைப்பவர் யார் ?
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.