கதவு .. கவிதை - கவிதா. நோர்வே

Photo by Sajad Nori on Unsplash

01.!
கதவு !
-----------!
கதவுகளை இறுகச்சாத்திவிட்டாய்!
நான் உள்ளே வருவதெப்படி?!
உடைத்து வந்தாலோ!
உடைந்த கதவுகள் பற்றியே!
சீற்றம் வருகிறது!
உன் கதவுகளுக்குரிய சாவி!
இப்போது என்னிடமில்லை!
சாவியில்லாமல் பூட்டுடைக்க!
எனக்கும் இஷ்டமில்லை!
சாவிகள் கிடைத்தாலும்!
உன் விருப்பின்றி!
ஒருக்காலும் திறவேன் நான்!
திறக்கும் என!
நிலவின் இராத்திரிகளிலும்!
நிலவை விடியல் தின்றபின்னும்!
உன் கதவருகில் !
காத்திருந்த நான்!
தற்போது!
எழும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்!
என் வெறுமை இப்போது!
பரந்த வெளிகளால்!
நிரப்படுகிறது!
சிறு புள்ளியாகி!
மறைந்துகொண்டிருக்கிறது!
உனக்கும் எனக்குமிடையிலான!
மூடிய கதவு!
விதிகள் உடைபடும் சப்தம்!
காலின் கீழ்!
நீ கதவு திற!!
பொறுக்கிச் சேகரித்த!
பழைய சாவிகளெல்லாம்!
அந்த வாசலில்!
வைத்திருக்கிறேன் நான்!
காற்றாகிவிட்ட மனதிற்கு!
கதவுகள் இனி எதற்கு?!
மிக அழகு!
வெளி நிலவு!!
கதவற்ற பிரபஞ்சம்!!
திறந்த பூமி!!
நான் போய்க்கொண்டிருக்கிறேன்!
02.!
கவிதை!
----------------!
நான் ஒரு கவிதையை எடுத்துப்படிக்கத்!
தொடங்குகிறேன்!
கவிதையென்றால் எனக்குப் பிரியம்.!
காற்றாய் என்னை எப்போதும்!
அவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.!
அதனால்!
எல்லாக் கவிதைகளுக்கும்!
என் மேல் பிரியம் என்று சொல்வதற்கில்லை!
சில கவிதைகள் அடிவானத்தின் அழகினை போல!
என்னுடன் பயணிக்கிறது!
சில கவிதைக்கு தொட்டாச்சுறுங்கி போல!
என்னை கண்டதுமே முகம் சுருங்கிவிடுகிறது!
சில கவிதைகள் கண்டும் காணமல்!
நழுவிவிடுகின்றன!
சில கவிதைகள் என்னைக் காதலிப்பதாக!
தீவிரம் காட்டுகின்றன!
எனக்கு தெரிகிறது சில கவிதைகள்!
அழகாய்ப் பொய் சொல்கின்றன!
இதமான பின்அந்திகளாய் சில கவிதைகள்!
என் வீடு வந்து போகின்றன!
முற்றத்தில் மட்டும் சுகம் கேட்டுப்போகிறது!
சில கவிதை!
ஒரு கவிதை எப்போதும் நினைவில் நிற்கிறது!
ஒரு கவிதையுடன் பேசாவிடில்!
ஒரு நாள் மரணித்துப்போகிறது.!
கைகளுள் சினுசினுத்துக்கொண்டு!
அழகானதொரு ஹைக்கு போல!
ஒரு கவிதை என்னையே சுற்றி வருகிறது !
எப்போதும் இரண்டு கவிதைகள்!
என்னோடே உறங்குகின்றன!
ஒன்று நெருக்கமாய்…!
இன்னொன்று எதிர்த்திசையுடன்.!
உறவாடிக்கொண்டிருக்கிறது!
சில கவிதைக்கு என்மேல்!
பெருமரியாதை!
சில கவிதைகளுக்கு என்னைத்!
தப்பாகவே புரிபடுகிறது!
சில கவிதை ஆர்வக்கோளாரில்!
அரித்துக்கொண்டிருக்கின்றன என்னை.!
கழுத்தறுத்த கவிதைகளும் உண்டு!
சில கவிதைகள்!
சாலையோரக் கானல் நீரைப்போல!
நெருங்கமுதலே கரைந்துவிடுகிறது!
போர்க்காலக் கவிதைகள்!
பரிதாப்பத்திற்குரியவை!
படிப்பதற்க்குக்கூட விரல்நடுக்கம் ஏற்படுகிறது!
இந்தக் கவிதைகளின் அழிவு!
ஏற்புடையதாயில்லை!
மூர்க்கமான கவிதைகளை!
என்னுள் நெருங்க விடுவதில்லை!
ஒரு கவிதை கனவுகளிலும்!
என் தலை கோதிக்கொண்டிருக்கிறது!
அன்பு செய்யும் கவிதைகள்!
எப்போதும் கண்மூடிய புத்தனைப்போல!
காட்சியளிக்கின்றன.!
கிழிந்துவிட்ட கவிதைகள் சிலவும்!
எரிந்து போன கவிதைகள் சிலவும்!
நினைவுகளாய் கனக்கிறது!
என்மீது கோபமான கவிதைகளை!
எனக்கு மிகவும் பிடிக்கும்!
அவை போலியாய் சிரிக்கும்போது மட்டும்!
முஞ்சியில் ஓங்கிக் குத்தத் தோன்றும்!
வன்முறைக் கவிதைகளுடன்!
எப்போதுமே வாக்குவாதம்!
சில அகிம்சைக் கவிதைகள்!
அர்ப்பத்தனமாக இருக்கின்றன!
மரபுக்கவிதைகளின் இம்சை சமயங்களில்!
எல்லை மீறுகிறது!
இவை புதுக்கவிதையைப் போல!
பாசாங்கு செய்வதில் அர்ப்பசந்தோசமடைகின்றன!
வயதேறிய கவிதைகள்!
நிதானமானவை, அனுபவமிக்கவை!
ஒருசில கவிதைக்குப்!
புறம்பேசுதல் பிடித்தமாயிருக்கிறது!
என்னில் பொறாமை எனும் கவிதைகண்டால்!
சிரிப்பு வருகிறது!
பக்கத்தில் இருந்தே சூழ்ச்சிசெய்யும்!
கவிதைகளையும் உடன் வைத்திருக்கிறேன்!
சில கவிதைகள் கலாரசனை கொண்டவை!
என்பதற்காகவே ஒத்துப் போகிறது!
சில கவிதைகள் கவிதைக்குரிய தகுதியை!
இழந்துவிட்டிருக்கின்றன!
நான் காதலித்த கவிதை ஒன்று!
தொலைந்துபோகத் துடித்துக்கொண்டிருக்கிறது!
எந்த சலனமுமற்று எல்லாக் கவிதைகளையும்!
ரசிக்கவே விரும்புகிறேன்;.!
சிலநேரங்களில் மட்டும்!
கவிதைகள் எல்லாம் மீண்டும்!
மனிதராகத் தெரிகின்றன!
அந்த நேரங்களில் ஒரு ரசிகனாக!
என்னைப் பாதுகாத்துக்கொள்ள!
உண்மையிலேயே!
நான் ஒரு கவிதையை எடுத்துப்படிக்கத்!
தொடங்குகிறேன்
கவிதா. நோர்வே

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.