தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அக்சய திருதியை

சித. அருணாசலம்
நாளெல்லாம் நிகழ்வுகளில் !
நல்லதே வேண்டுமென!
எல்லோரிடமும் எதிர்பார்ப்பது!
புல்லைத் தின்ன சொல்லிப்!
புலியை மல்லுக்கட்டுவது போலாகும்.!
நல்ல நாட்களில் அதைச்!
சொல்ல வரும் போது!
நினைவினில் அகலாது !
நீங்காமல் நிறைந்திருக்கும்.!
தங்க வியாபாரத்திற்காக!
தந்திரமாய் அதை மாற்றி!
வாங்குங்கள் தங்கத்தை!
பெருக்குங்கள் செல்வத்தை - என!
உணர்வுகளைச் சாதகமாக்கி!
உல்லாசமாய் வியாபாரம் பெருக்கி!
மனிதனைச் சிந்திப்பதிலிருந்து!
மழுங்கடிக்கச் செய்வதையும்,!
கூட்டத்தை வரவழைத்துக் !
கொள்ளை லாபம் ஈட்டுவதையும்,!
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!
உள்ளத்தில் தூய்மை ஒன்றே!
உலகத்தில் சிறக்குமென்பதை!
உணர்ந்திட வேண்டும்.!
-சித. அருணாசலம்

நான்கு இறக்கைகள் கொண்ட

ஏ.கே.முஜாரத்
அவன் மனசு!
------------------------------------------------!
அல்லாஹ்விற்கே உரித்தான நான் என்கிற!
சொற்பெறுமானத்தை சகோதரனான அவன்!
காக்கை இருளுக்குள் களவாடி!
வெள்ளை சீலைத் துண்டுகளால் துடைத்து!
பௌடர் இட்டு முத்தமிட்டு!
கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறான்.!
பெரும் சனத்திறல்களிலும்!
அச்சிறகுகளை உயர்த்தி பொம்மைக் குட்டி போல!
வடிவம் காட்டுகிறான்!
இன்னும் வானம் பூமிக்கு!
இடைப்பட்ட தூரம் கேட்கும் படியாக!
அ+க்காண்டியாகவும் பருந்தாகவும்!
அல்லது கழுதையாகவும் தேவைப்படின் நரியாகவும் மாறி!
உரத்து ஒலமிடுகிறான்!
நான் என்கிற அச்சொற் பெறுமானத்தை ஆணவத்தோடு!
தலைக்கு மேல் தூக்கி வைத்து!
கொண்டாடும் அவன் நாளை!
பிர்அவ்னாகவும் மரணிக்கக் கூடும்

அழகிய வாழ்வு நெய்வோம்

தீபச்செல்வன்
உணர்வுகளால் பகிர்வோம்!
மகிழ்வுகளால் பகிர்வோம்!
வலிகளால் பகிர்வோம்.!
நாம் நிலவின்!
வெளிச்சத்தில் பகிர்வோம்!
களங்கமில்லாத!
நமது குழந்தை முகங்களை.!
நாம் சூரியனின்!
ஒளியில் பகிர்வோம்!
தாய்மையடைந்த!
நமது மடியின் குரல்களை.!
உனது கையை பிடித்து!
பயணம் செய்தும்!
உனது தோள்களில் சாய்ந்து!
தூங்கியும்!
என் மடியில்!
நீ வேர் விட்டும்!
தாய்மையை!
நமக்குள் பகிர்வோம்.!
பிணைந்த நமது!
விரலிடுக்குகளில்!
சமத்துவ வலிமையில்!
எங்களை நாங்களாய்!
சுமப்போம்!
உன்னை நான் சுமக்கையில்!
நான் தாயாகிறேன்!
என்னை நீ சுமக்கையில்!
நீ தாயாகிறாய்.!
எனது சிறகு!
பறிக்கப்படாதவரை!
உனது சிறகும் பறிக்கப்படாது!
நான் சிறைவைக்கப்படாதவரை!
நீயும் சிறைப்படமாட்டாய்.!
சொற்களின் ஈரத்தால்!
குளிர்ந்த எண்ணங்களால்!
வெள்ளை புன்னகையால்!
நாம் இணைந்து!
அழகிய வாழ்வு நெய்வோம்.!
பூமியின் வேரில்!
ஓளியின் அடியில்!
நாம் விடுதலை சிருஸ்டிப்போம்!
நாம் நமக்குள்!
போராடத்தேவையில்லை!
நாம் நமக்குள்!
வதைபடத்தேவையில்லை!
மகிழ்வை புதைக்கத்தேவையில்லை!
கோப்பைகளை பரிமாறுவோம்.!
உன்னிடமும் என்னிடமும்தான்!
நமக்கான விடுதலை இருக்கிறது!
நம்மை நாமே!
விடுதலை செய்வோம்.!
வா…அழகிய நமது விடுதலையுடன்!
வாழ்க்கையை பகிர்வோம்.!
-தீபச்செல்வன்

மழையெல்லோரெம்பாவாய்

தேவஅபிரா
இங்கு பொழிகிறது மழை !
அங்கென் மண்ணிலும் பெய்யுமோ? !
கையேந்தா மனிதரின் கனவுகள் !
உலர்ந்த காலத்தின் மீதும் பெய்யுமோ? !
மழையின்றி நிமிராவெப்பயி£¤லும் பெய்யுமோ? !
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம் !
சுவடிழந்து அழுகிறது. !
தேரசைந்த திருக்கோவில் கனவுகளை !
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை !
பாடும் கிழவனின் கைத்தடியும் !
வழுவி நனையுமோ? !
ஊர் முடிந்த வெளியில் !
பொன்னிற மாலையில் !
மஞ்சள் குளிக்கும் !
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ? !
ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள் !
பின்னிப் பெருமழையெனப் பொழிய !
என் பெண்ணின் விழிகளை மருவி !
இதழ்களைத் தழுவும் !
கனவில் இலயிக்கும் !
சாளரக் கரையின் சயனத்துடலில் !
படுமோ தூவானம்? !
மூசிப் பெய்தும் !
முழுநிலமும் கரையவோடியும் !
பின்னும் பெயரின்றி !
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே !
தேடிப் பெய் என் தேசத்தை. !
ஏங்கித் தளர்ந்து இனிப்புகலே இல்லை !
எனத்தளம்பும் மனிதரை !
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய். !
இம்மழை மண்ணில் பெய்தது !
மரத்தில் பெய்தது !
மனதிலும் பெய்தது !
என்றுனக்கு அழியாப்புகழ் தருவேன். !
கார்த்திகை - 1996 !
தேவஅபிரா puvanendran@home.nl !
***** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன

மரணத்தின் வாசல்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
காலச் சக்கரம் !
நினைத்தபடி ஓடும் !
நாம் நினைக்காத !
ஒரு பொழுதில் !
திடீரென்று நின்று..!
தன் வாசல் திறந்து.!
விரும்பியவரை !
இழுத்துக்கொள்ளும் !
மரணம்..!
அது ஆணாக..!
பெண்ணாக.!
இன்னும் குழந்தையாக!
என்று..!
யாராகவும் இருக்கலாம்!
ஒரு பெருமூச்சி தானும்!
விட அவகாசம்!
கிடைக்காத தருணமது!
எந்த விருப்பமும்!
எந்த வெறுப்பும்!
நம்மை ...!
திருப்பி கொண்டு வர மாட்டா.!
மரணத்தின் வாசலை கடந்த பின்..!

முரண்

ச.இளம்பிறை
நிஜமாயிருக்கிறேன் !
முரணானவள் என !
முகம் சுழிக்கிறார்கள். !
மாக்கோலம் போடுவது !
மருதாணி இடுவது !
பூச்சரம் தொடுப்பது !
கோயிலுக்குப் போவது !
இப்படி எதுவுமே !
என்னிடத்தில் இல்லாததால் !
விடிவேதும் இல்லாது !
வேதனைப்படுகிறேனாம் !
அடங்காப்பிடாரி என !
ஆசைதீரக் கத்தட்டும் !
அதற்குமேல் என்னவுண்டோ !
எல்லாமே சொல்லட்டும். !
நான், !
நிஜமாகத்தானிருப்பேன் !
இவர்கள் !
முரணானவள் என !
முகம் சுழித்தே !
வாழட்டும்...! !

வீடு திரும்பல்

கவிதா. நோர்வே
மாமரமும்!
செவ்வந்தியும் சுற்றி நிற்க!
துளசிசெடி அருகில்!
நிலவும் கூட வரும் அந்திகளில்...!
இருந்தது எனக்கொரு வீடு!
சமயற்கட்டில் அம்மாவும்!
தோட்டத்தில் அப்பாவும்!
கத்த கத்த நிற்காமல்!
ஊர்சுத்தி திரும்பி வர!
இருந்தது எனக்கொரு வீடு!
அந்தி வரும்.!
ஜன்னல் ஓரம் - அங்கே!
வானில் ஒரு நிலவு வரும்!
எதிர்வீட்டில் ஒரு நிலவு வரும்!
வானம் நிரம்பிய தாரகைகளாய்!
தங்கையும் பட்டாளங்களும்!
நிரம்பிய அந்த அந்திப் பொழுதுகளில்!
நான் வீடு திரும்ப!
இருந்தது எனக்கொரு வீடு!
ஓரு விடியலின் பிறப்பில்!
இறந்துபோன!
என் அந்திப்பொழுதுகளை!
எனக்குணர்த்த போதாது!
தீராத பொழுதுகளின் வதை!
சுமந்த முகாம் குடிசைக்குள்!
வந்துபோன விடியல்கள்!
கடைசியாய்!
சொல்லிப் போனார்கள்..!
தோட்டாக்கள் துளைத்த!
துவாரங்கள் போக!
வீடும் கூரையும்!
துளிசிசெடியும் கூட!
இன்னமும் இருக்கிறதாம்!
வீடு; திரும்ப நேருகையில்!
அங்கே கவிந்து கிடக்கும் போலும்!
எனக்கான இரண்டாவது!
வதைமுகாம்!

குட்டி கல்வாழை

சிதம்பரம் நித்யபாரதி
தோட்ட மூலையில்!
குட்டி கல்வாழை!
இலை கிழிந்து வருந்தும்!
பக்கத்தில்!
சருகான வாழையைக் கண்டு கலங்கும்.!
காற்றின்!
அலைக்கழிப்பு-!
காலன் நான் எனக்!
காதில் கிசுகிசுப்பு.!
தோட்டத்தை விட்டோடி!
வீட்டுக்குள் தாளிட்டுக் கொண்டேன்.!
அப்படியும்!
ஜன்னல் வழி காற்று மோதும்! !
பிடுங்கிய சருகு வாழை-!
கூடத்தில்!
அமரர் பெட்டியில் இருப்பதாய்ப் பிரமை!!
!
-- சிதம்பரம் நித்யபாரதி

மே - 18, முல்லைவாய்க்கால்..

வித்யாசாகர்
மே - 18, முல்லைவாய்க்கால் நினைவுதினக் கவிதை


தேச ஜாம்பவான்களே!
வாருங்கள்;!
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்!
ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்;!
உம்மோடு -!
மனிதராய் பிறந்ததற்கு!
ஒரு விளக்காகவேனும்!
எறிந்துவிட்டுப் போகட்டும் எம்!
உறவுகள்!!
ஒன்று இரண்டு!
மூன்றேன்று சுட்டிருப்பானோ!
சிங்களவன்?!!!
சுடும்போது!
ஏதேனும் ஒரு குரல்கூடவா !
அவன் உறவை அவனுக்கு!
நினைவுருத்தவில்லை;!
போகட்டும்,!
நம் சமர் -!
எவனை கொல்வதுமல்ல!
ஈழம் - வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!!
இறந்த என்!
வீரர்களுக்கும்!
உறவுகளுக்கும்!
விளக்கேற்றி விளக்கேற்றி!
வைக்கிறேன்;!
கண்ணீர் அனைத்து அனைத்து!
விடுகிறது.!
உலகிற்கு எங்களின்!
இருட்டு மறைக்கப் பட்டு!
வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!!
ஒவ்வொரு!
உறக்கத்தின் போதும்!
இமை விட்டு நீங்காத -!
பிணக்குவியல்களாய்!
முல்லைவைக்காலில் முடைந்துப் போன !
எம் உறவுகளின் அந்த பிரிவு -!
அந்த நாள் -!
அந்த கதறல்கள் -!
அந்த பொழுது -!
எனக்கு கடைசி நினைவாக!
இருந்துவிட்டாலென்ன!!
முட்கள் உடைந்து போன!
மீனுக்கு வருந்தும் இனம்..!
என் -!
வீர சமருக்கு துணை நிற்காது!
வருந்தியென்ன பயனென்று!
சபிக்குமோ நமை -!
விளக்கேற்றுகையில் -!
நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!!
ஒரு லட்சமாம்!
இரண்டு லட்சமாம்!
கணக்கு சொல்கிறது செய்தி!
முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி;!
கணக்கில் வராது இறந்து போன!
எத்தனயோ உயிர்களுக்கென்ன!
இன்னொரு பிறப்பையா திருப்பித் தந்துவிடுமிந்த!
தேசங்கள்????!
ஓஹோ; தமிழரை!
உயிர்கணக்கிலிருந்து !
தள்ளிவைத்துவிட்டார்கள் போல்!
சிங்களன் வெல்லும் வரை, பாவிகள்!!

பூங்கொடி

அகரம் அமுதா
நிலவுச் செவிலியின்!
மேற்பார்வையில்!
மலர் குழந்தைகளைப்!
பெற்றெடுக்கும் நான்!
ஈன்ற பொழுது!
பெரிதுவக்கும் தாய்...!
!
ஈன்ற சேய்க்கும்!
தாய்ப்பால் வழங்காப்!
பெண்களிடையே!
ஈன்ற தாய்போல்!
வண்டுகளுக்குத்!
தேன்பால் ஊட்டுகின்ற!
என்னை யாரும்!
மங்கையற் குவமைசொன்னால்!
மனம் வெதும்புகிறேன்...!
!
*!
நான்!
மன்மதன் அம்புகளை!
மலிவு விலைக்குத்!
தயாரித்தளிக்கும்!
முன்னோடி நிறுவனம்...!
!
மலர் வகையராக்கள்!
யாவும்!
இயற்கை வயாகராக்கள்!!
!
கொடுங் காமுகரும்!
மலரை முகராது!
மங்கையரை நுகர்வாரில்லை...!
!
ஏனோ!
நட்சத்திர மலர்கள்!
தூவப்பட்ட!
வான மெத்தையில்!
நிலவு மங்கை காத்திருந்தும்!
சூரிய மணாளன்!
கிரணத்தன்று!
பலரறிய நன்பகலில்!
கலவி புரிகின்றான்!!
!
* !
பெண்களைப் போல்!
நானும்!
பூப்படைகின்றேன்...!
இரவெனும் முறைமாமன்!
இருட்குச்சி!
கட்டிய பின்னரே!
பூப்படைகிறேன்...!
நட்சத்திர அத்தைமார்களின்!
நலிங்குடன்!
நிலவொளியில் மஞ்சல்!
நீராட்டு விழா...!!
!
பெண்கள்!
தலையில் பூவைப்பது!
என்னைப் பார்த்துத்தான்!!
என்னை!
அமங்கலி யாக்கியே!
பெண்கள்!
சுமங்கலி யாகின்றனர்...!
அவர்கள்!
அமங்கலிகளாகக்!
காட்சிதரக் கூடாதென்றே!
நான்;!
சுமங்கலி யாகின்றேன்!!
அமங்கலிகளுக்காய்!
நான் என்!
மலர்கள் உதிர்த்து!
மலராஞ்சலி செலுத்துவதும்!
உண்டு!!
!
* !
புன்னகை புரிவதில்!
எனக்கு ஈடுசொல்ல!
யாருண்டு இங்கே?!
உங்களால்!
புன்னகைக்க முடியவில்லை!
என்பதால்!
என் உதடுகளைக்!
காம்புடன் கிள்ளுவதோ?!
மலர்கள் என்!
முகங்கள் ஆகுமென்றால்!
என்னை!
கழுத்துடன் கிள்ளி!
தூக்கிலிடுவதோ?!
என்!
அங்கங்களை ஆய்ந்து!
அங்கங்கே தொங்கவிட்டிருக்கும்!
பூக்கடைகள் யாவும்!
கசாப்புக் கடைகளேயன்றி!
வேறென்ன?!
நீங்கள்!
திருமண சடங்குகளுக்காய்!
என்னிடம் வந்தால்!
மகிழ்வோடு தலைகுனிகிறேன்...!
பிண வீதிக்குப்!
பூமெத்தைகள் தேடி!
என்னிடம் வந்தால்!
அழுத வண்ணம்!
தலை குனிவிக்கப் படுகிறேன்!!
!
-அகரம்.அமுதா