தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இவர்களெல்லாம்

இளந்திரையன்
காற்றலையில் !
சேதி சொல்லும் !
மனம் அழுது !
கண் துடைக்கும் !
பத்துப் பேர் பலி !
பயங்கரவாதம் !
குண்டு வெடிப்பு !
குவிந்தது !
பிணமலை !
கட்டிடக் காட்டினுள் !
கற் குவியலுள் !
காணாமல் போயினர் !
பரிதாபம் !
ஆயிரம் போதுமா? !
பத்தாயிரம் அனுப்பு !
பாதுகாப்புப் (!) !
படைகள் !
மண்ணின் !
முதல்வர்கள் !
மதத்தின் !
தலைவர்கள் !
பணத்தின் !
முதலைகள் !
இவர்களெல்லாம்... !
எந்தக் கிரகத்து !
தேவர்கள் !
இன்னும் !
எங்கள் பூமியில் !
யுத்தங்கள்

சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்

த.எலிசபெத், இலங்கை
ஞாயிறு வாராதா என்று!
ஞாபகத்தில் உளைகின்றது மனது...!
சிவப்பு நாளை கலண்டரில்!
கண்டவுடன் வரும் குதூகலிப்பு!
மேலதிக வேலையென்று பறக்கும்!
அப்பாவினால் இப்போதெல்லாம்!
பிடிக்காமலே போனது...!
!
கண்விழிக்கையில்!
உறங்கும் அப்பா நான்!
கண்ணுறங்கையில் வந்துதரும்!
முத்தத்தினை தூக்கத்தில்!
தட்டிவிடுகின்றேன்...!
பேச்சுப்போட்டியில் பெற்ற‌!
முதற்பரிசு கூட இன்னும்!
வராந்தாச்சாலை மேசையில்!
அப்பாவின் வாழ்த்துக்காய்!
ஏங்கிக்கொண்டிருக்கின்றது...!
பாலர்வகுப்பு வரை!
என்னோடு வந்த அப்பா!
டாலர்களின் மதிப்பேறியதும்!
ரொக்கத்தின் பின்னே ஓடியலைகின்றார்...!
மாலைநேர சைக்கிளோட்டம்!
மழைநாளின் ஐஸ்கிரீம்!
சாலையோரம் கைகோர்த்த நடை!
சாப்பாட்டுக்கடை தேடுமென் பிடிவாதம்!
அப்பாவின் தோளில் குதிரையோட்டம்!
அவர் மடியில் ஆட்டம்பாட்டம்!
தப்பாமல் தருகின்ற செல்லமுத்தம்!
தலைகோதும் விரல்கள் - எல்லாமே!
தாள்களுக்குள் அடங்கிப்போய்!
தாராளமாகவே இடைவெளியை!
விசாலப்படுத்தி விட்டிருந்தது....!
வாங்கிவந்த இனிப்பையூட்ட‌!
வாசலிலிருந்தே கூப்பிடுமென்!
அப்பாவின் குரல்கேட்க‌!
இப்போதெல்லாம்!
ஆசைப்பட மட்டுந்தான் முடிகின்றது...!
!
பாசத்தை நிரூபிக்க‌!
பணத்தை நிரப்ப வேண்டியதில்லை!
என்றுணர்த்த நானின்னும்!
வாழ்க்கையை படிக்கவில்லை....!
!
சொத்துசுகத்தினால் மட்டுமே -தன்!
சொந்த மகளின் சோகம்!
தீராதென்றுணர அப்பா இன்னும்!
உறவுகளை படிக்கவில்லை

புவி வெப்பமும் பொங்கலும்

ஜான் பீ. பெனடிக்ட்
வட அமெரிக்கா...!
கடும் குளிர் ஜனவரியும்!
கதகதப்பா யிருக்குதிங்கே!
கால நிலை மாற்றத்தின்!
காரணி யிதுதானோ?!
தமிழகம்...!
பருவம் வருதுன்னு!
பயிரிட்ட நெல் வயலெல்லாம்!
பருவமழை பொய்த்ததனால்!
பட்டு அழிஞ்சு போனபின்னே!
பரவலாக (பருவ)மழை பெய்தும்!
பலனின்றிப் போனதங்கே!
தாமதமா மழைபெஞ்சு!
தாமதமா பயிர்செஞ்சா!
தை மாதம் விளையாது-விவசாயிக்கு!
தைப் பொங்கல் இனிக்காது!
கால மாற்றத்திற் கேற்ப!
காலண்டரை மாற்றுங்களே-அறுவடைவரை!
தள்ளிக் கொஞ்சம் போடுங்களே-பொங்கலை!
தள்ளிக் கொஞ்சம் போடுங்களே!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

ஞான சூனியம்

த.சு.மணியம்
வயதுமோ மூன்றில் அன்று!
வந்தவர் கொடுத்த பாலால்!
வினையது பலனும் கண்டு!
விதைத்தவன் பாடல் கேட்டு!
தினமது கேணிக்கட்டில்!
திருவருள் கிட்டும் எண்ணி!
பலனது பாலும் கிட்டா!
பாதியாய் வயதும் போச்சு.!
பூட்டிய கதவை அன்று!
பாட்டிலே திறந்தார் கேட்டு!
பூட்டியே நானும் வீட்டை!
றோட்டிலே நின்று பாட!
கேட்டுமே போவோர் சொன்ன!
கேலிகள் பலவும் கேட்டும்!
நீட்டியே பாடி நானும்!
நிற்கிறேன் மருந்து வாங்க.!
ஆற்றிலே போட்டதெல்லாம்!
குளத்திலே எடுத்தார் கேட்டு!
நேற்றுமே வழியில் போட்ட!
என் பணம் தேடி நானும்!
முற்றுமே கிடைக்கும் எண்ணி!
வங்கியைக் கண்டபோது!
போட்டவன் எனது காட்டும்!
திரும்பியே வரவும் காணோம்.!
நரிகளைப் பரிகளாக்கி!
நற்பலன் பெற்றார் கேட்டு!
மருவியே எனது காரை!
மாற்றிட நினைத்த போது!
சுருதிகள் ஏதுமற்று!
சுத்தமாய் முடக்கம் காண!
கருதியே வேலை செல்லா!
காண்பலன் வேலை போச்சு.!
ஞானத்தைத் தேடி நானும்!
நாட்பல அலைதல் பார்த்தும்!
ஞானமும் என்னைக் காண!
நாணியே ஒதுங்கிக் கொள்ள!
ஓரமாய் தலையிருந்த!
ஒருசில முடியும் போக!
யாருமே தேடா நானும்!
நடக்கிறேன் வல்லை நோக்கி.!
-- த.சு.மணியம்

களம் தேடும் விதைகள்

மன்னார் அமுதன்
மிடுக்கும், துடிப்பும், விவேகமும் !
நிறைந்த இதயங்களே... !
சமூகப் பாரத்தை!
சாதீயத் தாழ்வை!
மதக் கொடுமைகளை!
மாறாத நல்லன்பை!
தாங்கி நிற்குமெம் கருக்கள்!
இவை !
களம் தேடும் விதைகள்...!
பாமரனின் உண்மைக் கதைகள்!
புத்துலகம் !
படைக்கத் துடிக்கும் சிசுக்கள்!
இரத்தமும் சதையுமே!
இதன் திசுக்கள்!
எழுதுகோலுக்குள் !
எம்மைத் திணிப்பதால்!
எண்ணத்தைப் பதிப்பதால்!
எவனெவனுக்கோ எரிகிறதாம்...!
இடம் !
பெயர்த்தவனை வருடி!
பெயர்ந்தவனை எழுதி!
நீலிக் கண்ணீர் விடும்!
போலிகளில்லை நாம்!
ஊதினால் பதராகும்!
உமிழ்ந்தால் முகம் கோணும்!
சராசரி விதைகளல்ல இவை!
ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில் !
அங்கம் தடவாது !
கோட்டுப் படத்தோடு !
கைகோர்க்கும் கவிதைக்கு!
நல்லோரைப் பாடத் தெரியும்!
நண்பருக்காய் வாடத் தெரியும்!
நடிப்போரைச் சாடத் தெரியும்!
ஓட்டுப் பெட்டிக்காய்!
ஓடத் தெரியாது!
முடியுமா தருவதற்கு!
உங்கள் உள்ளங்களை!
எம் எண்ணத்தை விதைக்க!
மூலை முடுக்கெல்லாம்!
முழங்கவே வந்தோம்!
கவிதைகள் தந்தோம்..!
களம் தேடும் விதைகளுக்கு!
தளம் அமைக்க!
தருவீரோ நிலங்களை!
உங்கள் உளங்களை!
பரப்புங்கள் எட்டுத் திக்கும் - எம்!
பாசறையின் கொட்டுச் சத்தம்

உச்சம் தொடுவோம்

சித. அருணாசலம்
அநியாயங்கள் உச்சம் தொட்டு!
அச்சுறுத்திக் கொண்டிருக்க!
நியாயங்கள் சோர்ந்து போய்!
நீட்டிப் படுத்துவிட்ட நிலை.!
விலைவாசி உச்சம் தொட்டு!
வியர்வையை உறிஞ்சி விடுகிறது.!
வேலை செய்த மனங்களிலே!
வேதனையை விதைக்கிறது.!
தீவிரவாதம் உச்சம் தொட்டு!
திகைக்க வைக்கிறது. !
பாவிகளின் நடமாட்டம்!
பல்கிப் பெருகுகிறது.!
எண்ணை விலை உச்சத்தில்!
எட்டமுடியாமல் இருந்து கொண்டு!
அனைத்திற்கும் காரணமாய்!
அலற வைக்கிறது.!
இன்னல்கள் இதுபோல!
எத்தனை வந்தாலும்!
மனிதநேயத்தில் உச்சம் தொட்டு!
மாற்றத்தைக் கொண்டு வருவோம்.!
-சித. அருணாசலம்

நானும் வாழாவெட்டி

வே .பத்மாவதி
நடப்பன ஊர்வன பறப்பன!
நகர்வன அனைத்துமே!
நீ உண்பாய் என்று சொன்னாயடா!
என் மனதையும் உண்டாய் !
சொல்லாமலே!
!
நீ பேசிக் கொண்டிருந்தாய்!
நான் மௌனம் சாதித்தேன்!
இடையில் எப்படி உன் உயிர்!
அனுப்பிய தூதஞ்சல்!
என் விழிக்கு எப்படி கிடைத்தது!
அது ரகசியம்!
!
நீ வாழ்க்கையை தொலைத்தேன்!
என்று சொன்ன அந்த!
வார்த்தையில் தான்!
நானும்!
வாழ்க்கையை தொலைத்தேன்!
!
எனக்கு பிடித்த!
எதுவுமே உனக்கு பிடிக்காது!
உனக்கு பிடித்தது போலே!
நடக்க என்னால் இயலாது!
இருந்தும் ஒரு பிடித்தம்!
இருந்தது உன் மேல்!
!
விரசம் இல்லா பார்வை!
விரல் பிடித்த விதம்!
விட்டுக் கொடுக்கும் வார்த்தை!
வெந்தணலாய் அளித்த காவல்!
இதை விட என்ன வேண்டும்!
ஒரு பெண்ணுக்கு ?!
!
இந்த உணர்வு!
என் வயது கோளாறு!
என்று சொல்லி!
ஒதுக்கிவிட!
உனக்கு ஒன்றும்!
அவ்வளவு வயதாகி விடவில்லை!
!
இந்த!
நொடி!
நானும் வாழாவெட்டி தான்

நான் - நிலா – நீ

சு.துரைக்குமரன்
தேடித்தடவுகின்றன உன் தெய்வீகம்!
உணர்ந்த விரல்கள்!
அருகில்லாததை அறிந்த மனதின் அறியாமையோடு!
தூக்கம் தொலைந்த இரவை சபிக்கிறது!
உன்னைப் பிரிந்த நினைவு!
புரண்டு படுக்கும்போது!
காதோரம் சுற்றும் கொசுக்கள்!
முன்னெப்போதும்!
உன் அரவணைப்பால் தாங்கள்!
அந்நியப்பட்டதை என்னிடம்!
உரத்துப் பாடுகின்றன!
சுழலும் மின்விசிறியின் இறக்கைகளோ!
நீயில்லாது களையிழந்த அறையில்!
சுழலும் அவஸ்தையில் புலம்புகின்றன!
உன் சொற்களில் மூடிக்கொண்டு விறைக்கின்றன!
ஜன்னல் வழி உள்நுழைந்த நிலவொளி!
பரிகசித்து சிரிக்கிறது!
என்னைப் பிரிந்த உன்னைப் பார்த்தபடி

பயணம்

s.உமா
சந்தோஷங்கள்!
சிறுகைதட்டல்கள்!
இவை !
தாமத படுத்தும் !
வேகத்தடைகள்..!
பாரங்களாகும்!
பாராட்டுகள்..!
வெற்றிகளோ!
பயணம் தடுக்கும்!
பெரும் பள்ளங்கள்..!
முயற்சியின் வேகத்தில்!
சிகரங்கள் கடக்கும்!
பயணத்தில்!
தோல்விகளே!
என்னை!
துரிதபடுத்தும்..!
காயங்களே!
என்னை!
கட்டாயப்படுத்தும்!
காரியமாற்ற..!
கண்ணீரே!
தண்ணீராகும்!
துவண்ட நெஞ்சம்!
தளிர்விட..!
தன்னம்பிக்கை!
துணைவர!
இமயங்கள் தாண்டியும்!
பயணிக்கும்!
என் மனம்... !
-- s.உமா

ஒரு கணம்

வீ.அ.மணிமொழி
இருள்...!
மீண்டும் இருள்...!
சுற்றிச் சூழ்ந்து கொண்டது!
தடித்த வேர்களும்!
முள் படர்ந்த விழுதுகளும்!
உடலை நெறித்து!
முறுக்குகின்றன!
வடுக்கள் பதிக்காமலே...!
மௌனங்கள் நிரம்பிய!
நிஜமில்லா!
அதன் மென்மை!
என் இரகசியங்களை!
பொறுக்கிக் கொண்டு!
செல்கின்றது...!
திரும்பி பார்க்காமலே...!
-- வீ.அ.மணிமொழி