என்ன சொல்ல.. வாழ்க்கை - வி. பிச்சுமணி

Photo by Paweł Czerwiński on Unsplash

என்ன சொல்ல போகிறாய்.. வாழ்க்கை பயணம்!
01.!
என்ன சொல்ல போகிறாய்!
-----------------------!
செல்போனுக்கு வலிக்காமல்!
பூனைநடை பேச்சில்!
இன்று கட்டாயம் கடற்கரை வா!
முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று சொல்லி!
போனை வைத்து விட்டாய்!
என்ன சொல்ல போகிறாய் எனும் எண்ணம்!
மீன்களாய் ஆழத்திலிருந்து அடிக்கடி!
நீர்மட்டம் வந்து சுவாசித்து செல்கின்றன!
அலையாய் முன்னால் வந்து!
பின்னால் வரும் அலையை!
கரையை தொடவிடாமல் மடக்கின்றன!
அலுவலக தோழியாய் வீட்டுக்கு செல்லும்!
அவசரத்தில் விட்டு சென்ற பொருளை!
விரைந்து வந்து எடுக்கின்றன!
பேரூந்து நிலையத்தில் காத்திருக்கையில்!
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேரூந்துகள்!
நான் வந்து கொண்டு இருக்கிறேனெ!
உன்னிடம் வந்து கட்டியம் கூறும் தானே!
உணவு பொருளை கண்டவுடன்!
தோழர்களை விளிக்கும் காக்கை!
அவர்கள் வந்தவுடன் சண்டையில்!
இறங்குவது போல் காத்திருக்கும நீ!
தாமதமாய் வரும் என்னிடம்!
விஷயத்தை சொல்லுமுன்!
விலலங்கம் பண்ணாதே கண்ணே !
!
02.!
வாழ்க்கை பயணம்!
--------------------------!
செங்கல்பட்டு வந்துவிட்டதா என!
செல்போனில் பார்க்க!
அது அண்ணா நகர் காட்டியது!
வெளியே ஊர்கள் பயங்கர அமைதியில்!
தூங்கி கொண்டிருந்தன!
நெல்லை விரைவுவண்டியிலிருந்து இறங்கி!
பெருங்களத்தூரில் இறங்க!
நாலாவது நடைமேடையில் புறப்பட தயராக இருந்த!
கடற்கரை வண்டி பிடித்து!
குளிர்ந்து காற்று முகத்தில் அடிக்காத வண்ணம்!
இருக்கைகள் பார்த்து அமர்ந்தோம்!
வண்டி ஒட்டுமொத்தமாக காலியாக இருந்தது!
தலையில் லுங்கியை முக்காடிட்டு!
சிவப்பு துண்டு அதன்மீது முண்டாசு கட்டி!
அரபுநாட்டு சேக்காய் கால்ஊனமான பிச்சைகாரர்!
கைத்தடியுடன் வண்டியில் ஏறி!
கதவோரம் தரையில் அமர்ந்தார்!
வண்டி பயணத்தை தொடங்கியது !
!
03. !
இன்று வருந்தி.. !
------------------!
ஐந்தாம் வகுப்பு படிக்கையில்!
தனிபயிற்சி ஆசிரியை வீட்டில்!
சிவப்பு ஜார்ஜ்எட் கெளனில்!
அழகு தேவதையாய் அமர்ந்திருந்த!
என் வகுப்பு சகமாணவியின் அருகில் அமர!
என்னுடன் என் நண்பன் போட்டிக்கு!
வருவதாக நினைத்து அவனை வெறுக்க!
அவனோ ஆறாம் வகுப்பு படிக்கும்!
அவளது அக்காவை அவனுக்கு பிடிக்குமென!
சொல்ல அவள் என் ஆள்தான் என்று மனது!
அங்காங்கே சொல்லி திரிந்தது!
சின்ன பெருமாள் கோவிலில் அவள்!
சகபிள்ளைகளுடன் தூண் பிடித்து விளையாட!
காதல்மலர் கூட்டமொன்று பாடல் பாடி!
விரட்டி விளையாடியது ஒரு காலம்!
தனிபயிற்சிக்கு போக பிடிக்காமல் நிறுத்திய போதுகூட!
அவளுக்கு என்ளை பிடிக்குமா என்று கேட்கவில்லை!
நான் கல்லூரி படித்து கொண்டிருக்கையில்!
ஒரு நாள் அம்மாவின் வற்புறுத்தலினால்!
மரப்பொடி வாங்க மரஅறுக்கும் கடையில் காத்திருக்கையில்!
அவளும் அவளது தோழியும் என்னை பெயர் சொல்லி!
அழைத்தபோதும்கூட பேசாமல் இருந்துவிட்டதற்கு!
இன்று வருந்தி…!
என்ன பயன்
வி. பிச்சுமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.